இரண்டாம் நிலை காவலர் தற்கொலை

ஆனந்த்

UPDATED: Sep 21, 2024, 7:27:40 AM

சென்னை

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் இருளப்பன் இவரது மகன் இசக்கி முத்து குமார் (38) 2008 ஆம் ஆண்டு காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்தார்.

இவருக்கு திருமணமாகி சங்கரி என்ற மனைவியும் இளமாறன் (14), சஞ்சய் (11) என இரு மகன்கள் உள்ளனர்.. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு பணிமாறுதல் பெற்று வந்த இவர் தற்போது விருகம்பாக்கம் பள்ளிக்கூட தெருவில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.‌ 

Latest Chennai District News

இந்நிலையில் இசக்கி முத்து குமார் 9 மாதங்களுக்கு முன்பு கோயம்பேடு காவல் நிலையத்தில் நுண்ணறிவு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு பணியாற்றி வந்தார். 

இன்று மதியம் காவலர் இசக்கி முத்து குமார் 2.30 மணிக்கு வீட்டிற்கு உணவு அருந்த சென்றுள்ளார்.. 

மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அவரது மூத்த மகன் இளமாறன் தந்தை இசக்கி வீட்டில் தூக்கிட்ட நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கூச்சலிட்டுள்ளார்.

Breaking News Today In Tamil 

இளமாறன் அழுகை சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் விருகம்பாக்கம் போலீஸார் சம்பவயிடத்திற்கு சென்று காவலர் இசக்கி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் காவலர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதும் மன அழுத்தத்திற்கு காரணம் குடும்ப பிரச்சினையா? அல்லது பணி சுமையா என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended