அதிகார போட்டியால் தமிழர் தேசம் கட்சி நிர்வாகிகளை பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் வெட்ட முயற்சி .
கார்மேகம்
UPDATED: Aug 5, 2024, 4:38:51 AM
இராமநாதபுரம்
அதிகார போட்டியில் தமிழர் தேசம் கட்சி நிர்வாகிகளை வெட்ட முயன்ற 3 பேர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.
( சமூக வலைதளங்களில் விமர்சனம்)
சித்தார்கோட்டை அருகே உள்ள பழனிவலசையை சேர்ந்தவர் முனியசாமி ( வயது 28) மாவட்ட தமிழர் தேசம் கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணை செயலாளர் இவரும் இந்த கட்சியின் மாவட்ட செயலாளரான தமிழ்வேந்தனும் சமூக வலைத்தளங்களில் கட்சி குறித்தும் சமுதாய முன்னேற்றம் குறித்தும் பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது
இதுதொடர்பாக இவர்களுக்கும் அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கம் கட்சியை நடத்தி வரும் கடலாடி தாலுகா ( டி) மாரியூரை சேர்ந்த மாந்தோப்பு லோகேஸ்வரனுக்கும் அதிகார போட்டி ஏற்பட்டதாக கூறப்படுகிறது
சமூக வலைத்தளங்கள்
ஒருவரை ஒருவர் சமூகவலைதளங்களில் விமர்சித்து வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது
இதுதொடர்பாக தமிழ் வேந்தன் அளித்த புகாரின் பேரில் லோகேஸ்வரன் மீது போலீஸ் சார் வழக்கு பதிவு செய்திருந்தனர்
இதனால் லோகேஸ்வரனுக்கு தமிழ் வேந்தன் மற்றும் அவருடன் உள்ளவர்கள் மீது ஆத்திரம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது
(3 வாலிபர்கள் கைது)
இந்த நிலையில் முனிசாமி ராமநாதபுரம் ரோமன்சர்ச் பகுதியில் உள்ள தையல் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தபோது அங்கு வந்த 3 பேர் அவரை நோட்டமிட்டு கண்காணித்தனர்
மேலும் முனியசாமி இரவு 8 மணி அளவில் கடையை விட்டு வெளியே வந்தபோது 3 பேரும் சுற்றிவளைத்து வாள் மற்றும் கத்தியால் தாக்க முயன்றனர்
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பி மீண்டும் கடைக்குள் சென்று உள்பக்கமாக பூட்டிக் கொண்டார் இதனால் அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்ததால் 3 பேரும் தப்பி ஓடினர் இச்சம்பவம் குறித்து அறிந்த போலீஸ் சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 வாலிபர்களையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
Latest Ramanathapuram District News
அதில் அவர்கள் குத்துக்கள்வலசை ( மதன்- 20) மதுரை மேலவளவு பெரியகருப்பன் என்ற ராசு (21) மற்றும் 17 வயது சிறுவன் என்பதும் இவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது ( தனிப்படை)
அவர்களிடம் நடத்திய விசாரணையில் முனியசாமி தமிழ்வேந்தன் ஆகியோர் சமூக வலைதளங்களில் பதிவு போடுவதால் ஆத்திரமடைந்த லோகேஸ்வரன் தனது வளர்ச்சிக்கு அவர்கள் இடையூராக உள்ளதாக கருதி கூலிப்படையை வைத்து இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது
இதற்காக லோகேஸ்வனின் தூண்டுதலின் பேரில் கூலிப்படையை சேர்ந்த 3 பேரும் ராமநாதபுரத்தில் ஒரு வீட்டில் தங்கி தமிழ்வேந்தனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ALSO READ | தினம் ஒரு திருக்குறள் 05-08-2024
News
தமிழ் வேந்தன் வெளியூரில் இருந்ததால் முனியசாமியை கொலை செய்ய முயன்றுள்ளனர் இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீஸ் சார் 3 பேரையும் கைது செய்தனர்
லோகேஸ்வரனை போலீஸ் சார் தேடிவருகின்றனர் லோகேஸ்வரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
இதற்கிடையே போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ் உத்தரவின் பேரில் லோகேஸ்வரனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சார் தெரிவிக்கின்றனர்.