• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • புதிய விமான நிலையத்திற்கு  காவல்துறை பாதுகாப்புடன் வீடுகளை அளவெடுக்க வந்த அதிகாரிகளால் பரபரப்பு.

புதிய விமான நிலையத்திற்கு  காவல்துறை பாதுகாப்புடன் வீடுகளை அளவெடுக்க வந்த அதிகாரிகளால் பரபரப்பு.

லட்சுமி காந்த்

UPDATED: Nov 5, 2024, 12:46:29 PM

காஞ்சிபுரம் மாவட்டம்

பரந்தூர், நெல்வாய், நாகப்பட்டு, இடையர்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் அறிவித்து.

அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இத்திட்டதினால் பாதிப்படையக்கூடிய ஏகனாபுரம் உள்ளிட்ட சில கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் விலை நிலங்கள், குடியிருப்புகள், நீர்நிலைகள் பாதிக்கப்படக்கூடிய ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து இன்று வரை 834 நாட்களாக விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

தொடர்ந்து நிலையெடுப்பு தொடர்பான அரசாணை வெளியாகியது அக்கிராம மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் , 

இதற்கிடையில் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்காக முதற்கட்ட பணியாக நிலம் எடுப்பதற்கான அறிவிப்புகளை நாளிதழ்களில் வெளியிட்டு நிலம் எடுப்பிற்கான நடவடிக்கைகள் அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் பரந்தூர் விமான நிலைய திட்டம் அமைய உள்ள பகுதிகளில் நீர்வளத் துறை அதிகாரிகள் ஆழ்துளை கிணறுகளை கணக்கெடுக்கும் பணியில் கடந்த வாரம் ஈடுபட்டனர்.

தற்போது நிலம் அளவிடும் பணியினை பொதுப்பணி துறை துவங்கியதை தொடர்ந்து நெல்வாய் ஊட்சியில் வீடுகளை அளவிடும் பணியை துவக்க காவல்துறையினரின் உதவி உடன் வருவாய் துறையினர் வந்தனர்.

தாசில்தார் உள்ளிட்ட வருவாய் துறையினரை அப்பகுதி மக்கள் மடக்கி தடுத்து மிகுந்த வாக்குவாதம் செய்து வருகின்றார்கள். அதனால் அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

VIDEOS

Recommended