ஃபெஞ்சல் புயலின் தாக்கம்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Bala

UPDATED: Nov 29, 2024, 3:00:19 PM

ஃபெஞ்சல் புயல்

ஃபெஞ்சல் புயல், நாளை மதியம் புதுச்சேரி அருகே கரையை கடந்துசெல்லும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் 30.11.2024 திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகள் இயங்காது என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

 

VIDEOS

Recommended