• முகப்பு
  • தமிழ்நாடு
  • வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணால் ஆன திமிலுடைய காளை உருவம் கண்டெடுப்பு.

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணால் ஆன திமிலுடைய காளை உருவம் கண்டெடுப்பு.

அந்தோணி ராஜ்

UPDATED: Aug 24, 2024, 11:00:08 AM

விருதுநகர் மாவட்டம்

வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுகாடு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு பணி கடந்த ஜீன் 18-ம் தேதி முதல் துவங்கி நடைபெறுகிறது.

முன்னதாக கண்ணாடி மணிகள் கல்மணிகள் மற்றும் பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப்பகுதி,கிபி 16-ம் நூற்றாண்டு நாயக்கர் கால செம்பு காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 1400-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று நடைபெற்ற அகழாய்வு பணியின்போது சுடுமண்ணால் ஆன திமிலுடைய காளையின் உருவ பொம்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

Rajapalayam News 

இதுவரை வெம்பக்கோட்டை அகழாய்வில் 15-க்கும் மேற்பட்ட திமிலுடைய காளையின் உருவ பொம்மை கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. 

மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்னோர்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளது இதன் மூலம் தெரிய வருவதாக தொல்லியல் துறைனர் கூறுகின்றனர்.

 

VIDEOS

Recommended