ஆதார் கார்டை கொடுப்பதில் உள்ள குளறுபடிகள் கலையுமா அரசு ?

கார்மேகம்

UPDATED: Jul 26, 2024, 7:16:51 PM

ஆதார் கார்டு

மத்தியில் மோடி அரசு அமைந்த பிறகு ஒவ்வொரு நாளும் ஒரு புதுவிதமான சட்டம் அமல்படுத்தப்பட்டுவது‌ தொடர் நிகழ்வாக இருந்து வருவது அனைவரும் அறிந்ததே 

இதன் ஒரு பகுதியாக துவக்கத்தில் ஆதார் கட்டாயம் என்றார்கள் நீதி மன்றம் தலையீடு செய்தும் கூட அவர்கள் முடிவில் இருந்து பின்வாங்க‌ வில்லை இச்சூழலில் இந்த புண்ணியவான்கள் ( ஆதார் அட்டையை) வட்டாட்சியர் அலுவலகம் வங்கிகள்‌ தபால் நிலையங்கள் நகராட்சி‌ அலுவலகம் போன்ற இடங்களில் மட்டும்தான் பதிவு செய்யவேண்டும் என்றார்கள்

இதர ( இ) சேவை மையங்களில் ஆதார் பெறும் வசதியை துண்டித்தார் கள் அதற்கும் சில காரணங்களை சொல்கிறார்கள் இத்தனையும் செய்தவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் ஆதார் பணி நடைபெறுவதை உறுதி செய்துள்ளார்களா ? என்றால் அதுதான் இல்லை அதற்கு தேவையான ஊழியர்களை நியமனம் செய்துள்ளார்களா என்றால் அதுவும் இல்லை ?

கோயம்பேடு  ஆதார் அலுவலகத்தின் அவலங்கள்

இந்நிலையில் இந்த ஆதார் பதிவில் ஏற்படும் எழுத்து பிழை இவற்றை சரி செய்ய மக்கள் ஒரு புறம் அலைவது தொடர்கிறது

மற்றொரு புறம் அதனை சரி செய்யும் இடங்களில் ( குறிப்பாக) (1947) என் கொண்ட ( டீ.ஈ.என்.) ஸ்கொயர் மால். 224. 228. 100. சென்னை கோயம்பேட்டில்   செயல்படும் அலுவலகத்தில் அறைகுறை (தமிழ் ) தெரிந்த நபர்களை பணிக்கு அமர்த்தி  செய்யும் குழப்பங்களுக்கு அளவே இல்லை .

அதுமட்டுமல்லாமல் அங்கு வருபவர்களுக்கு எந்த ஒரு மரியாதையும் அளிக்கப்படுவதும் இல்லை

அங்கு பணியில் இருக்கும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் ஆதார் கார்டை விண்ணப்பிக்க வருபவர்களுக்கு மரியாதை அளிப்பதில்லை என பல புகார்கள் எழுந்து வருகின்றது.

Latest News

அங்கு இருக்கும் மேலாளரிடம் இதைப் பற்றி புகார்கள் தெரிவித்தால் அவரும் கண்டுகொள்வதில்லை என புகார்கள் அளித்த வண்ணம் உள்ளனர்

விண்ணப்பிக்க வருபவர்கள் காலை முதலே டோக்கனை பெற நீண்ட வரிசையில் நிற்கும் அவலம் ஏற்படுகிறது.

இத்தனை இம்சைகளையும் கடந்து விண்ணப்பிக்க வருபவர்கள் ஆதார் கடை விண்ணப்பித்தால் ஆதார் கார்டில் பிழையுடன் வரும்பொழுது மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

Latest District News in Tamil 

பல நேரங்களில் தமிழ்நாடு முழுவதும் தாசில்தார் அலுவலகத்தில் செயல்படும் ஆதார் கார்டு விண்ணப்பிக்கும் அலுவலகத்தில் மெஷின்கள் வேலை செய்வதே இல்லை இத நாளும் மக்கள் தொடர்ந்து அலைந்து கொண்டே இருக்கின்றனர்.

இந்த நிலையில் சுமார் 100 க்கும் மேற்பட்ட கிராமங்களையும் ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட இராமேஸ்வரம் தாலுகாவில் ராமேஸ்வரம் வட்டாச்சியர்‌ அலுவலகத்தில் செயல்பட்டுவந்த ஆதார் மையம் மூடப்பட்டு தற்போது மூன்று மாதங்களுக்குப் பிறகு வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் செயல்படுவதாக தெரிகிறது

இதனை ராமேஸ்வரம் வட்டாட்சியர் பொதுமக்கள் பார்வைக்கு தெரிவிக்காமல் இருப்பதினால் இந்த விபரம் தெரியாமல் தீவு மக்கள் தினம் தோறும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து அலைந்து செல்லும் அவலம் தொடர்கிறது

Latest Rameshwaram District News

இதனை ராமேஸ்வரம் வட்டாச்சியர் எந்தெந்த‌ நாளில் ஆதார் பதிவு நடைபெறும் என்கிற தெளிவான அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும் என்று தீவுப் பகுதி மற்றும் ராமேஸ்வரம் மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கின்றனர் 

இது குறித்து ராமேஸ்வரம் பகுதி தீவுப் பகுதி மக்கள் தெரிவிக்கையில் மாவட்ட மற்றும் வட்டாட்சியர் நிர்வாகம்  உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆதார் மையம் செயல்படும் நாட்கள் எவை எவை என்பதை தெளிவுபட மக்களுக்கு  தெரிவிக்க வேண்டும் என்றனர்.

மேலும் மேலும் மக்களை அலைய வைக்காமல் ஆதார் கார்டுகளை வழங்கும் அலுவலகங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தி மக்களை இன்னல்களில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுப்பார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 

VIDEOS

Recommended