• முகப்பு
  • ஆன்மீகம்
  • திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பஞ்ச ரதங்களை சீரமைக்கும் பணி ராட்சத கிரேன் உதவியுடன் நடந்தது

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பஞ்ச ரதங்களை சீரமைக்கும் பணி ராட்சத கிரேன் உதவியுடன் நடந்தது

அஜித் குமார்

UPDATED: Aug 21, 2024, 4:50:49 AM

திருவண்ணாமலை 

அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவை முன் விட்டு, பஞ்ச ரதங்களை யும் சீரமைக்கப்படுகிறது. அதையொட்டி, பெரிய தேர் எனப்படும் மகாரதத்தை கிரேன் உதவியுடன் சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது.

திருவண்ணாமலை கோயில் அண்ணாமலையார் கார்த்திகை தீபத் திருவிழா, வரும் டிசம்பர் தேதி கொடியேற்றத் துடன் தொடங்குகிறது

தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் தீபத் திரு விழா உற்சவத்தில் நிறை வாக டிசம்பர் 13ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்படும்.

தீபத்திருவிழா உற்சவத்தின் 7 நாளன்று நடைபெறும் பஞ்சாத பவனி தேர் திரு விழா) மிகவும் பிரசித்தி பெற்றது.

திருவண்ணாமலை கோயில்

அன்று காலை தொடங்கி, நள்ளிரவுவரை மாட விதியில் பஞ்சரதல்கள் ஒன்றன் பின் ஒன்றாக பவனி வருவது தனிச்சிறப்பு 

இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மாடவீதியில் பவனி வரும் பஞ்சாதங்களை முன்கூட்டியே சீரமைத்து தயார் நிலையில் வைக்ககோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது

அதை பொட்டி விநாயகர் தேர் சுப்பிரமணியர் தேர், மகா ரதம் எனப்படும் பெரிய தேர் பராசக்தி அம்மள் தேர்.சண்டிகேஸ்வரர் தேர் ஆகியவற்றை சீரமைத்து பழுதுபாரக்கும் பணியை மேற்கொள்ள அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தீட்டமிட்டுள்ளது.

அண்ணாமலையார் கோயில்

அதையொட்டி, கடந்த மாதம் தேர் சீரமைப்புபணி வில் ஈடுபடும் தேர் ஸ்தபதிகள் மற்றும் பொறியாளர் குழுவினர் நேரடி ஆய்வு நடத்தினர். அப்போது, 

பஞ்சரதங்களில் என்னென்று , சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆய்வு செய்து அறநிலை துறைக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அறநிலை துறையின் ஒப்புதலை பெற்று தற்போது பணிகள் தொடங்கி உள்ளது 

குறிப்பாக உயரத்திலும் எடையிலும் மிகப்பெரியதான மகாரதத்தையும், அம்மன் தேரையும் முழுமையாக சீரமைக்கப்படஉள்ளது.

மகாரதம்

தேர் விதானம், சுவாமி பீடம், தேர் சக்கரங்களுக்கு பொருத்தப்பட்டுள்ள ஹைட்ராலிக் பிரேக் மற்றும் தேர் அச்சுகளை ஆகியவற்றையறு சீரமைப்பு செய்யப்படுகிறது.

இந்நிலையில், மகாரதம் என அழைக்கப்படும் பெரிய தேர் சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. அதையொட்டி, ராட்சத கிரேன் உதவியுடன் தேர் சிரமைப்பு பணியில் தேர் ஸ்தபதிகள் ஈடுபட்டானர் அண்ணாமலையார் ஆணையர் ஜோதி மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர்கள் தேர் சீரமைப்பு பணியை  பார்வையிட்டனர்.

ஆன்மீகம்

மகாரதம் சீரமைப்பு பணியை தொடர்ந்து, அடுத்தடுத்து அம்மன் தேர். சுப்பிரமணியர் தேர், விநாயகர் தேர் சண்டிகேஸ்வரர் தேர் ஆகியவற்றையும் சீரமைக்க உள்ளனர். இந்தப் பணிகள் அனைத்தும் வரும் நவம்பர் முதல் வாரத்தில் நடந்த திட்டமிட்டுள்ளனர்

அதைத்தொடர்ந்து பொதுப்பணி துறையின் உறுதி தன்மை சான்று பெற்று சீரமைக்கப்பட்ட தேர்களை வெள்ளோட்டம் விட திட்டமிடப்பட் டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

VIDEOS

Recommended