பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் அடுத்த மாதம் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்ப்பு.

கார்மேகம்

UPDATED: Sep 13, 2024, 8:54:05 AM

இராமநாதபுரம்

பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு முடிந்த பின்னர் அடுத்த மாதத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

( பாம்பன் பாலம்)

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட மதுரை - ராமேஸ்வரம் ரெயில் பாதையில் மண்டபத்தில் இருந்து மன்னார் வளைகுடாவில் உள்ள ராமேஸ்வரம் தீவை ரெயில் மூலம் இணைப்பதற்கு பாம்பன் பாலம் கடலின் நடுவே அமைக்கப்பட்டது

இந்த பாலம் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தின்போது கட்டப்பட்டது நூற்றாண்டை கடந்து பழமையான பாலம் ஆகிவிட்டதால் கடந்த 2022- ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23- ந் தேதி முதல் அந்த பாலத்தில் ரெயில்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது

Latest Ramanathapuram News In Tamil

இதற்கிடையே ரூ.545 கோடியில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணி பல்வேறு கட்டங்களாக நடந்தது இப்பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளன பாலத்தின் நடுவே கப்பல்கள் கடந்து செல்ல வசதியாக தூக்குப்பாலமும் அமைக்கப்பட்டுள்ளது 

பாம்பன் புதிய ரெயில் பாலம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது 

( பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு )

பல்வேறு கட்ட சோதனை ஓட்டங்கள் முந்த நிலையில் நவீன தொழில் நுட்பத்தில் அமைந்த தூக்குப்பாலத்தை திறந்து மூடி ரெயில்களை இயக்குவதற்கான சோதனை நடத்தப்பட இருக்கிறது

ரெயில் பாதை

மேலும் ரெயில்வே போக்குவரத்து பாதுகாப்பு கமிஷனரின் ஆய்வும் நடக்க உள்ளது அவரது ஆய்வு முடிந்து ரெயில் இயக்க ஒப்புதல் வழங்கப்பட்டால் அடுத்த மாதம் ( அக்டோபர் ) முதல் அந்த புதிய ரெயில் பாதையில் மீண்டும் ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிகிறது

அதே நேரத்தில் அக்டோபர் 2- ந் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி அல்லது அக்டோபர் 15- ந் தேதி பாம்பன் பாலத்தை தொடங்கி வைக்கும் விழா நடக்கலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன ஆனால் இதை ரெயில்வே அதிகாரிகள் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

VIDEOS

Recommended