- முகப்பு
- மாவட்டச் செய்தி
- விபத்து ஏற்படுத்திய விரைவு ரயிலின் எஞ்சின் அப்புறப்படுத்தப்பட்ட பின்னரே ரயில் சேவை வழங்கப்படும்.
விபத்து ஏற்படுத்திய விரைவு ரயிலின் எஞ்சின் அப்புறப்படுத்தப்பட்ட பின்னரே ரயில் சேவை வழங்கப்படும்.
L.குமார்
UPDATED: Oct 13, 2024, 9:24:48 AM
ரயில் விபத்து
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை தொடர்ந்து தடம் புரண்ட 11 ரயில் பெட்டிகளும் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் விபத்தை ஏற்படுத்திய விரைவு ரயில் இன்ஜின் அப்புறப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லக்கூடிய இரு வழி தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டது. அதேபோல் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் இரு வழி தடங்களில் ஒரு வழி ரயில் தடம் மட்டும் சீரமைக்கப்பட்டுள்ளது.
Latest Thiruvallur District News
மற்றொரு ரயில் தடத்தில் விபத்து நடந்த விரைவு ரயில் என்ஜின் ஆழமாக புதைந்துள்ளதால் அந்த ரயில் தடம் மட்டும் சீரமைக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
ஆனால் சீரமைக்கப்பட்ட மூன்று வழித்தடங்களில் இதுவரை 7 விரைவு ரயில்களும், ஒரு புறநகர் மின்சார ரயிலும் சென்றுள்ளது.
Breaking Tamil News Today
விபத்து ஏற்படுத்திய விரைவுரயிலின் எஞ்சின் அப்புறப்படுத்தப்பட்ட பின்னரே தொடர்ந்து ரயில் சேவை வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில் கொட்டும் மழையிலும், விபத்துக்குள்ளான விரைவு ரயில்லின் என்ஜினை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி நான்கு விரைவு ரயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை மார்க்கமாக மூன்று விரைவு ரயில் ஒரு புறநகர் வரையிலும் இயக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.