30 ஆண்டுகளுக்கு மேலாக தேங்கியுள்ள வழக்குகள் 1952- ம் ஆண்டு வழக்கையும் நிலுவையில் வைத்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றம்
கார்மேகம்
UPDATED: Sep 8, 2024, 7:53:20 AM
ஜனாதிபதி திரவுபதி முர்மு
சமிபத்தில் டெல்லியில் நடந்த நீதித்துறை மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்மு கோர்ட்டுகளில் நீண்ட காலமாக தேங்கியிருக்கும் வழக்குகள் குறித்து கவலை தெரிவித்தார்
இதைத் தொடர்ந்து இந்த விவாகாரம் நாடு முழுவதும் பேசு பொருளாகி வருகிறது அதனால் கோர்ட்டுகளில் நீண்ட காலமாக தேங்கியிருக்கும் வழக்குகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன
இதில் ஐ கோர்ட்டுகளில் மட்டுமே 58.59 லட்சம் வழக்குகள் தேங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது
சிவில் வழக்குகள்
இதில் சிவில் வழக்குகள் 42.64 லட்சமாகும் ஐகோர்ட்டுகளில் தேங்கியிருக்கும் வழக்குகளில் 30 ஆண்டுகளுக்கு மேல் தீர்ப்புக்காக காத்திருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 62 ஆயிரத்துக்கு மேல் என தெரியவந்துள்ளது
இதில் முக்கியமாக 1952- ம் ஆண்டு பதியப்பட்ட 3 வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன இதில் 2 வழக்குகள் கொல்கத்தா ஐகோர்ட்டிலும் ஒரு வழக்கு சென்னை ஐ கோர்ட்டிலும் காத்திருக்கின்றன இதைப் போல 4 வழக்குகள் 1952- ம் ஆண்டில் இருந்தும் 9 வழக்குகள் 1955- ம் ஆண்டில் இருந்தும் ஐ கோர்ட்டுகளில் தேங்கியிருக்கின்றன
ஜனாதிபதி வேதனை
இவ்வாறு நீதித்துறையில் அதிக அளவில் நீதிக்காக வழக்குகள் தேங்குவது மக்களுக்கு நீதி வழங்கும் முறையில் அநீதி இழைப்புக்கு சமம் என ஜனாதிபதி வேதனை தெரிவித்தார்
அத்துடன் இது போன்ற காலம் தாழ்த்தும் நிலையை நீதித்துறை தவிர்க்க வேண்டும் என்றும் கோட்டுக் கொண்டார் நீதி மன்றங்கள் மக்களின் கடைசி நம்பிக்கை அது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது அதை நீதி மன்றங்கள் சரியாக செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.