தமிழ்நாட்டில் முதல் சிறந்த யானை பாகன் விருது.

ரமேஷ்

UPDATED: Aug 12, 2024, 7:36:11 PM

கும்பகோணம் 

மங்களாம்பிகா சமேத ஆதி கும்பேஸ்வரன் திருக்கோயில் பழமையும், பெருமையும் வாய்ந்த சைவத்திருத்தலங்களில் ஒன்றாகும்.

மகாமகப் பெருவிழா நடைபெறும் பன்னிரெண்டு முக்கிய சைவத் திருத்தலங்களில் முதன்மையான தலமாகவும் இது விளங்குகிறது.

இங்கு ஆதி கும்பேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்க, இங்குள்ள தாயார் மங்களாம்பிகை, மந்திரபீடேஸ்வரியாக போற்றப்படுகிறார்.

யானை

இத்தலம் 51 சக்தி பீடங்களில் முதன்மையான சக்தி பீடமாகவும் விளங்குகிறது என்பது மற்றொரு சிறப்பு அம்சமாகும். 

ஆதி கும்பேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான மங்களம் என்ற பெண் யானை (56), இக்கோயிலுக்கு 14 வயதில், 1980ஆம் ஆண்டு மறைந்த காஞ்சி மகாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளால் வழங்கப்பட்டு, தற்போது வரை சுமார் 42 ஆண்டு காலமாக இங்கு பராமரிக்கப்பட்டு, கோயில் பூஜை மற்றும் திருவிழாக்காலங்களில் இறைப்பணி செய்து பவனி வருகிறது.

யானை பாகன் 

இந்நிலையில் யானை மங்கலத்திற்கு பராமரிப்பு, சுற்றுப்புறச்சூழல், யானையை கவனிப்பது உள்ளிட்ட அதற்கு தேவையான அனைத்தையும் முறையாக செய்து வரும் யானை மங்களம் பராமரிப்பாளரும், பாகனுமான அசோக்கிற்கு தென்னிந்திய யானைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சுதன் பாலன், அஜீத்குமார் ஆகியோர் தமிழ்நாட்டில் முதல் சிறந்த யானைப்பாகன் அசோக்கிற்கு நினைவுப் பரிசு மற்றும் விருதுகளை வழங்கினார்கள்.

கோயில்

இதில் கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், சிட்டி யூனியன் வங்கி மேலாண் இயக்குனர் பாலசுப்ரமணியன், மற்றும் இந்து சமய அறநிலை துறை அலுவலர்கள் கோவில் சிவாச்சாரியார்கள் பக்தர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமாக கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended