- முகப்பு
- மாவட்டச் செய்தி
- விபத்தில் 2 கால்களையும் இழந்த நபருக்கு மாவட்ட நிர்வாகம் 3 சக்கர வாகனத்தை வழங்காததால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மாற்றுத்திறனாளி.
விபத்தில் 2 கால்களையும் இழந்த நபருக்கு மாவட்ட நிர்வாகம் 3 சக்கர வாகனத்தை வழங்காததால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மாற்றுத்திறனாளி.
லட்சுமி காந்த்
UPDATED: Aug 10, 2024, 6:55:59 PM
காஞ்சிபுரம் மாநகராட்சி
செவிலிமேடு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மனைவி தேவி இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளன. மூர்த்தி கேப்ஸ் மற்றும் ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்து வந்தார் .
இந்நிலையில் கடந்த வருடம் விபத்து ஒன்றில் சிக்கி மூர்த்தியின் இரண்டு கால்களும் துண்டாகி விட்டன. முட்டிக்கு கீழே கால்கள் இல்லாத நிலையில் செய்வது அறியாமல் திகைத்த மூர்த்தி சுமார் 30 லட்சம் ரூபாய் செலவு செய்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்தார்.
மாற்றுத்திறனாளி
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் மூன்று சக்கர பெட்ரோல் வாகனம் வேண்டி மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பித்திருந்தார்.
பல நாட்கள் முயற்சித்ததின் விளைவாக, மாவட்ட நிர்வாகம் , ஆர்டிஓ , சிவில் சர்ஜன் ஆகியவர்கள் ஆய்வு செய்து மூர்த்தி 80 சதவீத ஊனம் என சான்று அளித்ததனர். அது மட்டுமல்லாமல் வாகனம் ஓட்டுவதற்கு மூர்த்தி தகுதி உள்ளவர் எனவும் RTO சான்று அளித்துள்ளார்.
Latest Kancheepuram District News
இதனைத் தொடர்ந்து மூர்த்திக்கு டிவிஎஸ் ஏஜென்டிடம் இருந்து ஆர்சி புக் மட்டும் மூன்று மாதம் முன்பு தபாலில் வந்தது . மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிக்கான வாகனத்தை இன்று கொடுத்து விடுவோம் ,நாளை கொடுத்து விடுவோம் என மாவட்ட நிர்வாகம் கூறி வந்த நிலையில், டி வி எஸ் ஏஜென்டிடம் இருந்து உங்கள் வாகனத்தை மாதாந்திர சர்வீஸ்க்காக எடுத்துக் கொண்டு வாருங்கள் என மாதா மாதம் அழைப்பு மட்டும் வருவதைக் கண்டு மூர்த்தி அதிர்ச்சியுற்றார்.
Latest Kancheepuram News & Live Updates
சினிமா படத்தில் வடிவேல் பேசும் வசனம் போல ஆர்சி புக் இங்கே இருக்கிறது .வாகனம் எங்கே உள்ளது என்ற கதையாக, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் செயல்திறன் உள்ளது என மாற்றுத்திறனாளிகள் புலம்புகின்றார்கள்.
நன்றாக உள்ள மனிதர்களுக்கே பலரின் உதவிகள் தேவைப்படும்போது , விபத்தில் இரண்டு கால்களும் துண்டான நிலையில் வீட்டையையும் விற்று 30 லட்சம் ரூபாய் செலவில் சிகிச்சை மேற்கொண்ட நபருக்கு 90 நாட்களுக்கு மேலாகியும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனத்தை கொடுக்காது மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
ALSO READ | உணவில் கலக்கும் மைக்ரோ பிளாஸ்டிக்.
மு க ஸ்டாலின்
மத்திய அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக ஏகப்பட்ட திட்டங்கள் மற்றும் நிதியையும் ஒதுக்கி வருகின்ற நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் துறையை தன் கைவசம் வைத்திருந்தும் இரண்டு கால்களும் துண்டான நபருக்கு மாற்றுத்திறனாளிக்கான வாகனத்தை அளிக்காமல் ஆர் சி புக் மட்டும் வழங்கியது மிகப்பெரிய வேதனையை அளிக்கிறது என மாற்றுத்திறனாளிகள் கூறுகின்றனர்.
இந்த துறையை கையில் வைத்துள்ள முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுகளுக்கு, உடனடியாக அவர்கள் பயன்படுத்தும் வாகனத்தை உடனே விடுவிக்க வேண்டும் என மாற்றத்திறனாளிகள் சார்பில் மாவட்ட தலைவர் பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.