• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நடுக்கடலில் பாண்டிச்சேரி மீனவர்களுக்கும் பழவேற்காடு மீனவர்களுக்கும் மோதல் பேருந்துகள் சிறை பிடித்து போராட்டம் பரபரப்பு

நடுக்கடலில் பாண்டிச்சேரி மீனவர்களுக்கும் பழவேற்காடு மீனவர்களுக்கும் மோதல் பேருந்துகள் சிறை பிடித்து போராட்டம் பரபரப்பு

L.குமார்

UPDATED: Aug 5, 2024, 2:19:28 PM

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி

தொகுதிக்கு உட்பட்ட பழவேற்காடு அருகே இன்று அதிகாலை பழவேற்காடு மீனவர்கள் வழக்கம்போல் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.

அப்போது பாண்டிச்சேரியை சேர்ந்த விசைப்படகு ஒன்று பழவேற்காடு மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதிக்கு வந்ததால் அதனை பழவேற்காடு மீனவர்கள் எதிர்த்து கேட்டுள்ளனர்.

பாண்டிச்சேரி மீனவர்கள்

இதனால் கோபம் அடைந்த பாண்டிச்சேரி மீனவர்கள் ஈட்டி மற்றும் பயங்கர ஆயுதங்களால் பழவேற்காடு மீனவர்களை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் பத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் காயமடைந்துள்ளனர்.

இதில் லோகேஷ் என்ற மீனவர் படுகாயம் அடைந்து உள்ளார். தாக்கிய பாண்டிச்சேரி படகு அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றுள்ளது.

பின்னர் காயம் அடைந்தவர்களை கடலில் இருந்து பழவேற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பழவேற்காடு மீனவர்கள்

இதில் லோகேஷ் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதுகுறித்து திருப்பாலைவனம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் காவல்துறையினர் பழவேற்காடு பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீன் வளத்துறை

மேலும் மீன் வளத்துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமாக இது போன்று நடைபெற்றதாக கூறி பழவேற்காட்டில் கடையடைத்து பழவேற்காடு பேருந்து நிலையத்தில் சாலை மறியல் மற்றும் பேருந்துகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

 

VIDEOS

Recommended