சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை
இளையராஜா
UPDATED: Oct 11, 2024, 10:13:52 AM
ஆயுத பூஜை
கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும், ஜீவனத்திற்கும் துணை புரியும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை நாளாகும்.
உடல் வலிமையின் சக்தியாக துர்க்கா தேவியையும், வாழ்க்கைக்குத் தேவையான செல்வத்தைத் தரவல்ல சக்தியாக மஹாலட்சுமியையும், அறிவையும் ஆற்றலையும் தரவல்ல கல்வியின் தேவதையாக சரஸ்வதி தேவியையும் நாம் வழிபட்டு அந்த தேவியரின் அருள் பெற்று வலிமை, செல்வம், கல்வி ஆகிய மூன்றினையும் பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட பண்டிகையே நவராத்திரி.
சரஸ்வதி பூஜை
முதல் மூன்று நாள்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாள்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாள்கள் சரஸ்வதிக்கும் உரியவை. 10ம் நாள் மூன்று தேவியரும் சேர்ந்து பராசக்தியாக தோன்றி, மகிஷ்சாசுர அரக்கனை வதம் செய்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
நவராத்திரியின் ஒன்பது தினங்களை அடுத்து ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
விஜயதசமி
வீடு, கல்விக் கூடங்கள், தொழில் நிறுவனங்களிலும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையைப் பொதுமக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம்.
அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள்