மூன்று வாரங்களுக்கு பிறகு பிச்சாவரம் சுற்றுலா  மையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

சண்முகம்

UPDATED: Aug 19, 2024, 7:03:35 AM

பிச்சாவரம் சுற்றுலா மையம் 

கடந்த மாதம் கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக பல்வேறு சுற்றுலாத்தலங்கள் சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது 

அதே போன்று சிதம்பரம் அருகே உள்ள மாங்குரோவ் என்று அழைக்கப்படும் அலையாத்தி காடுகள் நிறைந்த பிச்சாவரம் சுற்றுலா மையமும் சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாமல் மூன்று வாரங்களாக வெறிச்சோடி காணப்பட்டது, 

இதனை அடுத்து தற்போது கேரளாவில் நிலச்சரிவு பாதிப்பிலிருந்து பொதுமக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது

அதனைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை முதல் தொடர் விடுமுறை என்பதால் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்,

குறிப்பாக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகள் அலையாத்தி காடுகள் நடுவே துடுப்பு படகு மற்றும் மோட்டார் படகு மூலம் படகு சவாரி செய்து அலையாத்தி காடுகளில் அழகை ரசித்து செல்கின்றனர்,

அலையாத்திக் காடுகள்

மேலும் படகு சவாரி செய்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து அதற்கான டோக்கனை பெற்ற பிறகு படகு வரும் வரை காத்திருக்கும் சுற்றுலா பயணிகள் அலையாத்திக் காடுகள் தெரியும் வகையில் அவர்கள் கைப்பேசி மூலம் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் காட்சி காண முடிகிறது 

கடந்த மூன்று வாரங்களாக பிச்சாவரம் சுற்றுலா மையம் வெறிச்சோடி காணப்பட்டதால் அப்பகுதியில் உள்ள சிறுகுரு வியாபாரிகள் சற்று தோய்வுடன் காணப்பட்டனர்,

தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் அவர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

 

VIDEOS

Recommended