• முகப்பு
  • குற்றம்
  • ஊராட்சிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைக்கேடு.

ஊராட்சிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைக்கேடு.

செ.சீனிவாசன் 

UPDATED: Oct 3, 2024, 2:20:33 PM

நாகப்பட்டினம் மாவட்டம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் பிரதமந்திரி வீடு கட்டும் திட்டம் 2016 முதல் 2020 வரை முறைக்கேடு நடந்திருப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து அப்போதிருந்த மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மீது துறைசார்ந்த விசாரணைகள் நடைப்பெற்று வந்தது.

இந்த நிலையில் கீழ்வேளூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆதமங்கலம், பட்டமங்கலம், கொடியாளத்தூர், கோவில்கண்ணாப்பூர், தெற்குபனையூர், வலிவலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் சுமார் 146 வீடுகள் முறைக்கேடு நடந்ததாக கண்டறியப்பட்டது.

Latest Nagapattinam District News Headlines 

அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆதமங்கலம் ஊராட்சி ஆய்வு மேற்கொண்டனர். 

அதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக காலை முதல் மயிலாடுதுறை மாவட்டம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாலரவிக்குமார் தலைமையில் லஞ்ச ஒழிப்புதுறை ஆய்வாளர் அருள்பிரியா உள்ளிட்ட குழுவினர் கோவில்கண்ணாப்பூர், தெற்குபனையூர், ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதமந்திரி வீடு கட்டும் திட்டம் 

ஆய்வில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக் கொடுக்காமலே பயனாளிகள் பெயரில் அதிகாரிகள் பல கோடி ரூபாய் மோசடி செய்வது அம்பலமாகியுள்ளது மொத்தமாக எத்தனை வீடுகளில் மோசடி நடந்துள்ளது யார் யார் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது விசாரணை முடிவில் தெரியவரும்.

 

VIDEOS

Recommended