குண்டும் குழியுமான தார் சாலையில் வாழை மரம் நடும் போராட்டம் அதிகாரிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரமேஷ்
UPDATED: Oct 3, 2024, 7:13:14 PM
கும்பகோணம் மாவட்டம்
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா பருத்திச்சேரி கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக கீரனூர், ஆடிபிலியூர், துக்காரி, திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூராட்சி வரை சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் செல்லும் சாலையை பள்ளி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் அப்பகுதி கிராம மக்கள் செல்வதற்கு சாலையை பயன்படுத்துகின்றனர்.
ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இச்சாலை செப்பனிடப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது.
விவசாயம் பற்றிய செய்திகள்
மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறி நடந்து செல்லவோ இருசக்கர வாகனத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த சாலையில் கர்ப்பிணி பெண்கள் இருசக்கர வாகனத்தில் சென்றால் குழந்தை பிறந்து விடும்.
நிறமாத கர்ப்பிணி பெண்கள் சென்றால் அபார்ஷன் ஆகிவிடும் என்று அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் சாலை மிகவும் மோசமாக உள்ளது என்று தெரிவித்தனர்.
வேளாண்மை செய்திகள்
தரமற்ற சாலைகளை சீர் செய்யக்கோரி பலமுறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மணுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை உடனே சாலை சரி செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஒன்றிய செயலாளர் பழனிவேல் தலைமையில் சாலையில் வாழை மரங்களை நட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
Agriculture News Updates
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிளைச் செயலாளர் பழனிவேல், வீரமணி, ஜோசப் ராஜ், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் முருகன், ஒன்றிய குழு உறுப்பினர் ரங்கசாமி, வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் கண்ணன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சாலையை சரி செய்ய கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.
தகவலயறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாச்சியார் கோவில் காவல்துறை ஆய்வாளர் ராஜேஷ், தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.