- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ICICI வங்கி 20 ஆண்டுகால வாடிக்கையாளரிடம் நகையை திருப்பி கொடுக்காமல் சுமார் 6 மணிநேரமாக காக்க வைத்த அவலம்.
ICICI வங்கி 20 ஆண்டுகால வாடிக்கையாளரிடம் நகையை திருப்பி கொடுக்காமல் சுமார் 6 மணிநேரமாக காக்க வைத்த அவலம்.
லட்சுமி காந்த்
UPDATED: Nov 6, 2024, 7:23:39 PM
காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பூக்கடை சத்திரம் பகுதியில் மிகவும் பிரபலமான ICICI வங்கி செயல்பட்டு வருகிறது . இந்த வங்கிக்கு ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாளருக்கு அளிக்கக்கூடிய சேவைகளை இந்த வங்கி திருப்தியாக அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகின்றது. அதேபோல வாடிக்கையாளர் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களிடம் பெனால்டி வசூலிப்பதிலும் இந்த வங்கி முன்னணியில் உள்ளது என கூறப்படுகிறது.
ICICI BANK
இந்த வங்கியில் காஞ்சிபுரம் செங்கழு நீரோடை தெருவை சேர்ந்த, ஆதி காமாட்சி கோவிலின் முன்னால் நிர்வாகி சதீஷ் என்பவர் கடந்த 20 வருடங்களாக ஐசிஐசிஐ வங்கியில் வாடிக்கையாளராக உள்ளார்.
கடந்த 14 மாதங்களுக்கு முன்பு இந்த வங்கியில் தன்னுடைய மனைவியின் பெயரில் நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார். அதற்கு முறையான வட்டியும் அவ்வப்பொழுது கட்டி வந்துள்ளார்.
தங்க நகை கடன்
இந்நிலையில் அடகு வைத்த நகையை மீட்டுக் கொள்ள இன்று மதியம் 2 மணி அளவில் சதீஷ் அவர்களின் மனைவி வங்கிக்கு சென்றுள்ளார். தங்க நகை கடன் பெயரில் கட்டவேண்டிய முழு பணத்தையும் தன்னுடைய வங்கி கணக்கிலிருந்து செலுத்தி விட்டார். பணம் செலுத்திய பின்பும் அவருக்கு வழங்க வேண்டிய அவருடைய நகையை திருப்பிக் கொடுக்காமல் சுமார் 5 3/4 மணி நேரம் காக்க வைத்துள்ளனர்.
இதை கேள்விப்பட்ட சதீஷ் வங்கிக்கு சென்று ஐந்தரை மணி நேரமாக ஏன் நகையை கொடுக்காமல் தாமதம் செய்கின்றீர்கள் என வங்கியிடம் கேள்வி எழுப்பியதற்கு வங்கி மேலாளர் முறையான பதில் அளிக்கவில்லை.
செய்தியாளரை மிரட்டும் ஐசிஐசிஐ வங்கி
அதனால் தன்னுடைய நகைகள் வங்கியில் இருக்கிறதா, இல்லையா என தெரியாமல் மன உளைச்சலில் சதீஷ் மற்றும் அவருடைய மனைவி உள்ளானார்கள்.
சம்பவத்தை கேள்விப்பட்டு செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்ற பொழுது வங்கி மேலாளர் மிகவும் தரக்குறைவாக செய்தியாளர்களை பேசி வெளியே போங்கள் எனவும், செக்யூரிட்டியை அழைத்து இவர்களை வெளியே அனுப்புங்கள் எனவும் கூச்சலிட்டார்.
செய்தியாளர்கள் வருகைக்குப் பின்பு வங்கி நிர்வாகம் நகையை திருப்பிக் கொடுப்பதற்கான ஆன்லைன் பரிவர்த்தனைகளை வேகப்படுத்துவோம். செய்தியை போடாதீர்கள் என மிரட்டும் தொனியில் கூறினர்.
ICICI Gold Loan
சில காலமாகவே ICICI வங்கியில் வாடிக்கையாளருக்கு முறையான சேவைகள் ,தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என வாடிக்கையாளர்கள் பலர் தெரிவித்து வருகின்ற நிலையில், 20 ஆண்டு கால வாடிக்கையாளரை இப்படி காக்க வைத்து அவமானம் செய்வது எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என சதீஷின் மனைவி மிகவும் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார்.
பேட்டி சதீஷ். ஆதி காமாட்சி கோவில் முன்னாள் நிர்வாகி