• முகப்பு
  • அரசியல்
  • இஸ்லாமிய அமைப்புகளிடம் கருத்து கேட்கவில்லை என எடப்பாடி பழனிசாமி தவறான கருத்தை கூறுகிறார்

இஸ்லாமிய அமைப்புகளிடம் கருத்து கேட்கவில்லை என எடப்பாடி பழனிசாமி தவறான கருத்தை கூறுகிறார்

ஆனந்த்

UPDATED: Sep 30, 2024, 12:24:03 PM

சென்னை

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டி ஊக்கத்தொகை வழங்கும் விழா திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, கோரிமேடு பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் மாவட்ட தலைவர் ஷேக் தாவூத் தலைமையில் நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்கினார்.

ஜவாஹிருல்லா

இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் :

துணை முதல்வர் மற்றும் புதிதாக அமைச்சராக பதவி ஏற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மாநிலங்களின் உரிமைகளை குழி தோண்டி புதைக்கக் கூடிய திட்டம்.

முதல்வர் அதனை தனது உரையில் கூறியதை வரவேற்கிறோம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் பேசிய வீடியோவிற்கும் அமைச்சரவை மாற்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை அனைத்து மக்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் முதலமைச்சர் அமைச்சரவையை அமைத்துள்ளார் அந்த வகையில் தான் அதை பார்க்க வேண்டும்.

Latest District News Today In Tamil 

இஸ்லாமிய அமைப்புகளிடம் கருத்து கேட்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தவறான கருத்தை கூறுகிறார். 

இது கூட்டு நாடாளுமன்ற நடவடிக்கை குழு போன்ற ஒன்று கருத்து கேட்பு கூட்டம் நாடாளுமன்ற நடவடிக்கைப் போன்று தான் அமையும் கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கு கொள்ளக் கூடியவர்களை தமிழக அரசு முடிவு செய்வதில்லை நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை குழு தான் முடிவு செய்கிறது

தமிழகத்தில் உள்ள எம்எல்ஏ, எம்பிக்கள், ஜமாத்துகள், முஸ்லிம் அமைப்புகள் இவற்றின் பிரதிநிதிகள் எல்லாம் நாளைய கருத்து கேட்புக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended