• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கலெக்டரிடம் தானே மனு கொடுத்தீர்கள் அவரிடமே பட்டா வாங்கி கொள்ளுங்கள் விஎஓ பதில் மன உளைச்சலில் பொதுமக்கள் 

கலெக்டரிடம் தானே மனு கொடுத்தீர்கள் அவரிடமே பட்டா வாங்கி கொள்ளுங்கள் விஎஓ பதில் மன உளைச்சலில் பொதுமக்கள் 

பரணி

UPDATED: Jul 5, 2024, 2:04:15 PM

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுக்கா கடப்பந்தாங்கள் கிராம பொதுமக்கள் அரசு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு கொடுத்து வந்துள்ளனர்

இந்த நிலையில் கடந்த மாதம் 26, 27 ம் தேதியில் ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 20 கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்க மனு கொடுத்துள்ளனர்.

இந்த மனுவின் மீது கடந்த 03/07/2024 அன்று கடபந்தங்கள் கிராம நிர்வாக அலுவலர் மைதிலி ஆய்வு செய்துள்ளார் இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில் வி எ ஒ மைதிலி மனுதாரர்களிடம் யார் உங்களை மனு கொடுக்க சொன்னது காலியாக உள்ள மனைகளின் சர்வே எண்கள் 150/2C1, 138 என்று குறிபிட்டு ள்ளீர்கள் இது காலி மனை என்று உங்களுக்கு எப்படி தெரியும் இதனை ரத்து செய்து விட்டால் என்ன செய்வர்கள் உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது நீங்கள் மனுவை கலெக்டரிடம் தானே கொடுத்தீர்கள் அவரிடமே போய் பட்டா வாங்கிகொள்ளுங்கள் என்று வாய்க்கு வந்த படி பேசுகிறார்.

மேலும் அவர் பேசுகையில் மக்களுக்கு சேவை செய்யும் அதிகாரி இப்படி எங்களிடம் மரியாதை குறைவாக நடந்துக்கொள்வது எங்களுக்கு மனஉளைச்சலாகிறது

மாவட்ட ஆட்சியர் உண்மை நிலையை அறிந்து எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கவும் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

 

VIDEOS

Recommended