• முகப்பு
  • குற்றம்
  • ஜியோ நம்பரை வைத்து மர்ம நபர்கள் ஹேக் செய்து பணத்தை எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஜியோ நம்பரை வைத்து மர்ம நபர்கள் ஹேக் செய்து பணத்தை எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சண்முகம்

UPDATED: Sep 28, 2024, 2:20:10 PM

கடலூர் மாவட்டம்

புவனகிரி அருகே பெரியநற்குணம் கிராமத்தைச் சேர்ந்த அருள்பிரகாசம்(53) என்பவரின் ஜியோ நம்பர் வங்கி கணக்கு மற்றும் ஜிபே உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவரது வங்கி கணக்கிற்க்கு நெல் விற்பனை செய்ததால் போடப்பட்ட ரூபாய் 1,44,011 பணத்தை சிறுக சிறுக ஆன்லைன் யுபிஐ மூலம் மர்ம நபர்கள் எடுத்துள்ளனர்.

இதேபோல் சோழத்ரத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவி வெண்ணிலா(35) என்பவரின் ஜியோ நம்பர், இதுவும் ஜி பே மற்றும் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது.

இவரது நம்பரை வைத்து ரூபாய் 3600 ஐ மர்ம நபர்கள் எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட சைபர் கிரைமில் புகார் அளித்துள்ள நிலையில் சேத்தியாத்தோப்பில் உள்ள ஜியோ அலுவலகத்தை பத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு முற்றுகையிட்டனர்.

அவர்களிடம் கேட்டால் தங்களுக்கு எதுவும் தெரியாது எனவும் நீங்கள் எதுவாக இருந்தாலும் மேல் அதிகாரிகளிடம் பேசிக் கொள்ளுங்கள் எனவும் தெரிவித்தனர்.

மேலும் இதே போல் இப்பகுதியில் பலர் பாதிக்கப்பட்டு மாவட்ட காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

ஜியோ நம்பரை வைத்து மர்ம நபர்கள் ஹேக் செய்து பணத்தை எடுத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் பணம் பறிபோகும் முன் சம்பந்தப்பட்ட ஜியோ நம்பர் டவர் சிக்னல் ஆப் செய்யப்பட்டு பின்னர் ஒர்க் ஆகாமல் இருக்கிறது.

சம்பந்தப்பட்ட நம்பரோடு இணைக்கப்பட்ட ஆதார் எண்ணும் பிளாக் செய்யப்படுகிறது. மொத்தத்தில் நன்றாக இயங்கிக் கொண்டிருந்த சிம் முடக்கப்படுகிறது எனவும் தெரிவித்து, இதற்கடுத்து தானாகவே சம்பந்தப்பட்டு ஜியோ நம்பர் ஈ சிம்மாக மாற்றமடைகிறது.

இதுகுறித்த எந்தவிதமான தகவலோ, ஒடிபியோ தங்களுக்கு வருவதில்லை என குறிப்பிடுகின்றனர். ஈ சிம்மாக மாற்றப்பட்ட பிறகு இதனை வைத்து பணம் சிறுக சிறுக யு பி ஐ மூலம் எடுக்கப்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டவர்கள் வேதனையோடு குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும் இது எங்கே தவறு நடக்கிறது என தெரியவில்லை. அதனால் நாங்கள் ஜியோ அலுவலகத்தை முற்றுகையிட்டு தகவல் கேட்டபோது அவர்கள் தகவல் தர மறுக்கிறார்கள்.

நீங்கள் மேல் அதிகாரிகளை பாருங்கள் என்று குறிப்பிடுகிறார்கள் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

 

VIDEOS

Recommended