• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கோத்தகிரி பேருந்து நிலையத்தில் பழைய துணிகள் வைக்கும் இடத்தில் உடல் கருகி ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

கோத்தகிரி பேருந்து நிலையத்தில் பழைய துணிகள் வைக்கும் இடத்தில் உடல் கருகி ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

அச்சுதன்

UPDATED: Jul 30, 2024, 4:41:37 AM

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி

கோத்தகிரி பேருந்து நிலையம் பகுதியில் வசதி உள்ளவர்கள் தங்களது வீட்டில் உபயோக படுத்தாத பழைய துணிகளை வசதி வாய்ப்பற்றோர் உபயோக படுத்தும் விதத்தில் அன்பு மேடை எனும் இரும்பு பெட்டகத்தை கோத்தகிரி பேருந்து நிலையம் பகுதியில் தனியார் அமைப்பு மூலமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்டது.

இதில் நேற்று இரவு 10 மணி அளவில் அதிக மது போதையில் இருந்த முதியவர் ஒருவர் பழைய துணிகளுக்கு இடையில் படுத்து இருந்துள்ளார் அப்போது அவர் புகை பிடிக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக அந்தப் பழைய துணிகளின் மேல் தீ பற்றி உள்ளது.

Nilgiris News Today

டீ மல மழவென அங்கிருந்த அனைத்து துணிகளின் மேல் பரவியதால் துணிகளுக்கு இடையில் இருந்த முதியவரின் மேலும் தீ பற்றியுள்ளது. 

இதனைக் கண்ட இரவு ரோந்து உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் காவலர் பிரேம் டாக்ஸி ஓட்டுநர் மோகன் ஆகியோர் அருகில் இருந்த பேக்கரியில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து அவரின் மேல் ஊற்றி தீயை அணைத்தனர்.

Latest Nilgiri News & Live Updates

தகவல் அறிந்து தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் முதியவரின் உடல் 80 சதவீதத்திற்கு மேல் எரிந்துவிட்டது. 

பின்பு தீயணைப்புத் துறையினர் முதியவரை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் எவ்வாறு தீ பற்றியது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended