சுமார் 400 ஏக்கரில் விவசாய பணியை தொடங்க முடியாமல் தரிசு நிலமாக இருப்பதாக விவசாயிகள் கவலை.
தருண் சுரேஷ்
UPDATED: Oct 1, 2024, 2:03:38 PM
திருவாரூர் மாவட்டம்
காவிரி டெல்டா மாவட்டத்தில் சம்பா, தாளடி பணிகளுக்காக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையில் இருந்து தமிழக அரசு தண்ணீர் திறந்து விட்டது
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கோவில்பத்து பகுதிகளில் மட்டும் சுமார் 400 ஏக்கர் விளைநிலம் தரிசு நிலமாக இருந்து வருகிறது
காவிரியின் கிளை நதிகளான குடமுருட்டி ஆறுகளிலிருந்து பிரியும் சந்தன வாய்க்கால் வழியாக செல்லும் சி, டி. பிரிவு வாய்க்கால்களை தூர்வாரி சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது
இதனால் அந்த வாய்க்கால் புதர்மண்டியும் , வெங்காய தாமரை செடிகள் கொடிகள் மண்டியும் மேடாக காட்சியளிக்கிறது
விவசாய செய்திகள்
தற்போது திருவாரூர் மாவட்டத்தில் பல இடங்களில் விவசாயிகள் நேரடி விதைப்பு பணியை தொடங்கியுள்ளனர் ஒரு சில பகுதிகளில் நடவு பணியையும் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது
ஆனால் கோவில்பத்து பகுதியில் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது சந்தானவாய்க்கால் வழியாக வரும் தண்ணீர் வடிகால் வாய்க்கால் வழியாக சென்று கொண்டிருக்கிறது
விவசாயம் செய்ய பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது சி, டி, வாய்க்கால்கள் ஆங்காங்கே தூர்ந்து போய் இருக்கிறது
நீர்வளத்துறை
எனவே நீர்வளத்துறை அதிகாரிகள் விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு போர்கால அடிப்படையில் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்
டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்படும் போது காவிரியின் கிளை நதிகளான குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாறு ஆகியவற்றில் வரும் நிலையில் விவசாயிகள் உரிய நேரத்தில் சாகுபடி பணிகளை துவங்குவதற்கு வாய்ப்பு இல்லை.
Breaking News Today In Tamil
மாறாக பருவமழைக்குப் பின்னர் காலதாமதமாக துவங்கப்படுவதால் மழைக்காலங்களில் விளைநிலங்கள் பெரிதும் பாதிப்பு அடைவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
பேட்டி
1, செந்தில்குமாா் விவசாயி வலங்கைமான்.