நான்கு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன வயது முதிர்ந்த தம்பதியினர் எலும்புக்கூடுகளாக கண்டுபிடித்தனர்.
சசிகுமார்
UPDATED: Oct 3, 2024, 7:30:11 PM
தர்மபுரி மாவட்டம்
அரூர் அடுத்த ஈட்டியம்பட்டி அருகே உள்ள வெளாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 70 வயது உடைய சின்ன குழந்தை என்பவரும் இவருடைய மனைவி சாரதா ஆகிய இருவரும் கடந்த மே மாதம் 13ஆம் தேதி அன்று காணாமல் போனதாக அரூர் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் காணாமல் போன வயது முதிர்ந்த தம்பதியினரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை நேரத்தில் வேப்பம்பட்டி அடுத்த மல்லூத்து என்ற கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் இரண்டு மனித எலும்புக்கூடுகள் இருப்பதாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் சின்னகுழந்தையின் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர்.
தமிழகத்தை அதிர வைக்கும் குற்றங்கள்
அப்போது சின்ன குழந்தை மற்றும் சாரதா ஆகிய இருவரும் காணாமல் போன போது அணிந்த உடைகள், காலணிகள் போன்ற பொருட்களை வைத்து உறுதி செய்தனர்.
மேலும் எலும்புக்கூடுகளுக்கு அருகே விஷம் மருந்து டப்பா இருந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் அங்கு சென்ற காவல் துறையினர் ஆங்காங்கே கிடந்த எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓடுகளை சேகரித்து டிஎன்ஏ பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Latest Krishnagiri News Today In Tamil
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன இரண்டு முதியவரின் உடல்கள் வெறும் எலும்பு துண்டுகளாகவும் மண்டை ஓடுகளாகவும் கிடைக்கப்பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் எதற்காக விஷ மருந்து அருந்தி உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து அரூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.