• முகப்பு
  • விவசாயம்
  • நாகையில் நெல் சாகுபடிக்கு மாற்றாக சோதனை முறையில் செண்டி பூ சாகுபடியில் இறங்கிய விவசாயிகள் உரிய விலை இல்லாததால் வேதனை.

நாகையில் நெல் சாகுபடிக்கு மாற்றாக சோதனை முறையில் செண்டி பூ சாகுபடியில் இறங்கிய விவசாயிகள் உரிய விலை இல்லாததால் வேதனை.

செ.சீனிவாசன் 

UPDATED: Oct 3, 2024, 2:04:45 PM

நாகப்பட்டினம் மாவட்டம்

மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்காத நிலையில் கடைமடை மாவட்டமான நாகையில் நெல் சாகுபடி முற்றிலும் பொய்த்து போனது இதனால் மனம் உடைந்த விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக தோட்டக்கலை துறை மூலம் குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு சாகுபடி செய்வதற்காக நெல் ரகங்களை தவிர்த்து தோட்டக்கலை பயிர்களை விளைவிக்க ஊக்குவிக்கப்பட்டனர்.

அதன் விளைவாக திருக்குவளை சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் செண்டி பூ சாகுபடி ஈடுபட்டுள்ளனர்.

செண்டி பூ சாகுபடி 

தற்பொழுது பூக்கள் பூக்கத் துவங்கி உள்ளன ஒரு நாள் விட்டு ஒரு நாள் பூக்களைப் பறித்து அருகில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வருகிறார் 

சென்ற மாதம் கிலோ 50 ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரை விலை போன பூக்கள் தற்பொழுது 20 ரூபாய் மட்டுமே விலை போவதாகவும் இதனால் உரிய விலை கிடைக்கவில்லை என் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்‌.

Agriculture News in Tamil

செண்டி பூ நல்ல விளைச்சல் உள்ள நிலையில் போதிய விலை இல்லாததால் அடுத்த முறை சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர் 

எனவே மாவட்ட நிர்வாகம் தோட்டக்கலை துறை மூலம் கொள்முதல் செய்து உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுத்தால் நெல்லுக்கு மாற்று பயிராக செண்டி பூ சாகுபடி செய்ய விவசாயிகள் முன் வருவார்கள் என தெரிவிக்கின்றனர்.

 

VIDEOS

Recommended