கல்வெட்டு வைக்க ரூ.9 லட்ச ரூபாய் செலவா ?

ரமேஷ்

UPDATED: Oct 3, 2024, 5:15:08 AM

Kumbakonam Latest News in Tamil

கும்பகோணம் அருகே பெருமாண்டி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் சார் ஆட்சியர் ஹிருத்யா தலைமையில் நடைபெற்றது. 

வட்டாட்சியர் சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.கே பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கும்பகோணம் மாநகராட்சியுடன் பெருமாண்டி ஊராட்சி இணைக்கப்பட உள்ளதால் இது கடைசி கிராம சபை கூட்டமாக நடைபெற்றது.

கிராம சபை கூட்டம் 

கூட்டத்தில் பெருமாண்டி ஊராட்சியைச் சேர்ந்த ஹரி என்பவர் பேசும்போது, பெருமாண்டி ஊராட்சியில் அம்சவள்ளி நகரில் 518 மீட்டர் தூரத்திற்கு தார் சாலை ரூ.11.98 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. 

ஆனால், அதேபோல் நேரு நகரில் 150 மீட்டர் தூர சாலைக்கு ரூ.13.53 லட்சம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இதில் பத்து லட்ச ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது.

Corruption 

அதுமட்டுமின்றி தார் சாலை அமைக்கப்பட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதற்கான வழித்தடங்களை அமைக்காமல் வாய்க்கால்களில் கழிவு நீர் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது என குற்றச்சாட்டை அடுக்கினர். 

அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.கே பாஸ்கர், கல்வெட்டு வைக்க ரூ.9 லட்ச ரூபாய் செலவாகிவிட்டதாகவும், அதுபோக இதர செலவுகள் ஆகிவிட்டதாக மலுப்பலாக பதில் அளித்தார்.

Online Tamil News 

அதனை ஏற்றுக் கொள்ளாமல் தன்னுடைய கேள்விக்கு உரிய பதிலளிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்திய ஹரியிடம் மைக்கை கொடுக்குமாறு வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் மைக்கை திரும்ப கொடுக்க மறுத்து அவசர அவசரமாக தேசிய கீதத்தை பாடி கூட்டம் நிறைவுற்றதாக புறப்பட்டு சென்றார். இதனால் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

VIDEOS

Recommended