• முகப்பு
  • விவசாயம்
  • மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழக காவிரி விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழக காவிரி விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

சண்முகம்

UPDATED: Oct 2, 2024, 11:25:15 AM

கடலூர் மாவட்டம்

காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி கடைவீதியில் 2023- 2024 ஆம் ஆண்டுக்கான மழை வெள்ள பாதிப்பு மற்றும் பயிர் காப்பீட்டுக்கான நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நிவாரணம் வழங்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

தமிழக காவிரி விவசாய சங்கத்தினர் 

நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுக்கான இழப்பீடுகளை வழங்காத இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மத்திய மாநில அரசுகளோடு கூட்டு சேர்ந்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் விதமாக கொள்ளை அடித்து வருகின்றன என்றும் குற்றச்சாட்டுகள் வைத்தனர். 

மேலும் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு பயிர் சாகுபடியை துவக்கும்போது ஊக்கத்தொகையாக ஏக்கருக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.

பயிர் காப்பீடு

மழை வெள்ளப் பாதிப்பு மற்றும் பயிர் காப்பீட்டுக்கான நிவாரணம் வழங்கும்போது பாதிப்புக்கான அளவிடுகளை மேற்கொள்வதை கைவிட்டு விட்டு அனைத்து விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர். 

விவசாயிகளுக்கு இந்த போராட்டத்தின் மூலம் தீர்வு கிடைக்கவில்லை எனில் அடுத்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் தலைமையில் மாபெரும் தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

 

VIDEOS

Recommended