வலங்கைமான் பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விவசாய நடவு பணிகள் பாதிப்பு.
தருண் சுரேஷ்
UPDATED: Sep 27, 2024, 9:37:15 AM
திருவாரூர் மாவட்டம்
வலங்கைமான் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி வலங்கைமான் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வலங்கைமான் பகுதிகள் முழுவதும் மின் கம்பிகள் சேதமடைந்து மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் வயல் பகுதியில் காற்று வேகமாக வீசும் போது மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டு அறுந்து விழுந்து மின்வெட்டு ஏற்படுகிறது.
மின் கம்பிகள்
மேலும் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி கொள்வதால் அடிக்கடி மின்மாற்றியில் உள்ள வயர்கள் அறுந்து விடுகிறது.
இதனால் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது விவசாயிகள் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் சம்பா , தாளடி நேரடி நெல் விதைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர் மின் கம்பிகள் விவசாய நிலங்களில் தாழ்வாக செல்வதால் ஒரு சில பகுதிகளில் நடவு பணிகள் தொடங்க டிராக்டர் மூலம் உளவு பணியை தொடங்க முடியாமல் இருந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே வலங்கைமான் மின்வாரிய அதிகாரிகள் இது குறித்து உடன் நடவடிக்கை மேற்கொண்டு சேதமடைந்த மின் கம்பிகளை சீரமைக்க, தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள்
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் டெல்டா மாவட்ட விவசாயிகள் விவசாயம் செய்ய ஏதுவாக மேட்டுர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதை தொடர்ந்த விவசாயிகள் தற்போது நடவு பணிகளை தொடங்க டிராக்டர் மூலம் உழவு பணியை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாகவும்
டிராக்டர் உழவு பணியை மேற்கொண்டால் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் டிராக்டர் மீது உரசும் என விவசாயிகள் பயப்படுகின்றனர் வரும் மழைக்காலத்திற்குள் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை இழுத்து கட்டி சரி செய்து தர வேண்டும் என தெரிவித்தனர்.