• முகப்பு
  • இந்தியா
  • 370 - வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் விளைவு முதல் முறையாக பட்டியலின மக்கள் வாக்களித்து மகிழ்வு.

370 - வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் விளைவு முதல் முறையாக பட்டியலின மக்கள் வாக்களித்து மகிழ்வு.

கார்மேகம்

UPDATED: Oct 3, 2024, 9:31:32 AM

காஷ்மீர்

370 - வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் காரணமாக காஷ்மீர் மாநிலத்தில் வால்மீகி சமுதாயத்தினர் வாக்களித்து தங்களின் ஜனநாயக காற்றை சுவாசித்து வாக்களித்து மகிழ்ந்தனர்

பாரத நாடு சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்களிக்கும் உரிமை கூட மறுக்கப்பட்ட வால்மீகி சமுதாயத்தினர் முதல் முறையாக காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்துள்ளனர் 

370- வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட தால் தான் இந்த வாக்குரிமை எங்களுக்கு கிடைத்திருக்கிறது என அவர்கள் மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றனர்

370 - வது சட்டப்பிரிவு

50 - ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த காங்கிரஸ் அரசும் காஷ்மீரை ஆளத்துடித்த முஸ்லிம் அமைப்புகளும் இவர்களின் வாக்குரிமைக்காக இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை

வால்மீகி சமுதாயத்தினர்

ஜனநாயக நாட்டில் வாக்களிக்கக் கூட உரிமை இல்லாமல் தவித்த இவர்கள் இப்பொழுது வாக்களித்துள்ளது காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் தான் பட்டியல் சமுதாய மக்களின் உரிமைக்காக போராடுகிறோம் என்று இரட்டை வேடம் போட்ட காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் இன்றளவும் கூட 370- வது சட்டப்பிரிவு நீக்கத்தை எதிர்த்து வருகின்றனர்.

இதிலிருந்து இவர்களின் போலி முகத்தை பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் உணர்ந்து விட்டார்கள் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு பட்டியலின மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்றுத் தந்த மத்திய அரசை இந்து முன்னனி வாழ்த்தி வரவேற்கிறது. 

 

VIDEOS

Recommended