- முகப்பு
- விளையாட்டு
- உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி எதிர்வரும் 21 ஆம் திகதி தர்கா நகரில்
உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி எதிர்வரும் 21 ஆம் திகதி தர்கா நகரில்
பேருவளை பீ.எம்.முக்தார்
UPDATED: Dec 20, 2024, 9:02:28 AM
இலங்கை பேருவளை உதைப்பந்தாட்டச் சங்க தலைவர் வெற்றிக்கிண்ணத்திற்காக நடாத்தும் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி எதிர்வரும் 21 ஆம் திகதி (21-12-2024) பி.ப.3.00 மணிக்கு தர்கா நகர் ஸாஹிராக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும்.
பேருவளை கிரேட் ஸ்டார் உதைப்பந்தாட்ட கழகமும் தர்கா நகர் ரெட் ஸ்டார் உதைப்பந்தாட்ட கழகமும் இறுதிப் போட்டியில் மோத உள்ளதாக சங்க செயலாளர் எம்.எஸ்.எம்.சீனான் தெரிவித்தார்.
பேருவளை உதைப்பந்தாட்ட சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 20 விளையாட்டு கழகங்கள் இச் சுற்றுப்போட்டியில் பங்கு பற்றியதுடன் இறுதிப் போட்டிக்கு மேற்படி இரு அணிகளும் தெரிவாகின.
தலைவர் வெற்றி கிண்ணத்திற்காக நடாத்தப்படும் சுற்று போட்டிக்கான முழுச் செலவையும் பேருவளை உதைப்பந்தாட்டச் சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.ரிஸ்வான் ஹாஜியார் பொறுப்பேற்றுள்ளார்.
பேருவளை மஹகொட ஐ.எல்.எம்.ஸம்ஸுதீன் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற தலைவர் கிண்ண அறிமுக நிகழ்வில் அவர் 10 லட்சம் ரூபாய் அன்பளிப்புச் செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
21 ஆம் திஙதி மாலை நடைபெறும் பரிசளிப்பு விழாவுக்கு தலைவர் எம்.எஸ்.எம் ரிஸ்வநாதியார் தலைமை வகிப்பார்.
இலங்கை உதைப்பந்தாட்டச் சம்மேளனன தலைவர் எம்.ஜஸ்வர் உமர் பிரதம அதிதியாகவும் உப தலைவரும் களுத்துறை உதைப்பந்தாட்ட சங்க தலைவருமான டொக்டர் மனில் பெர்ணாந்து கௌரவ அதிதியாகவும் கலந்து கொள்வர்.
பேருவளை உதைப்பந்தாட்ட சங்க உறுப்பினர்கள், இதன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள 20 கழகங்களின் தலைவர்கள்,செயலாளரால் மற்றும் உறுப்பினர்கள்,பிரமுகர்கள்,ரசிகர்கள் என பலரும் கலந்து கொள்வர்.
இதற்கான பரவலான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் எம்.எஸ்.எம்.சீனான் குறிப்பிட்டார்.