அரசை நம்பி பயனில்லை என  களத்தில் இறங்கிய விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு குவியும் பாராட்டு

செ.சீனிவாசன்

UPDATED: Aug 13, 2024, 8:23:17 AM

நாகப்பட்டினம் மாவட்டம்

தலைஞாயிறு பகுதியில் அரிச்சந்திரா நதி பாய்ந்து வருகிறது சுமார் 90 சதவீத பகுதியில் இந்த நதியிலிருந்து தான் தாய் வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்கிறது

அந்த அரிச்சந்திரா நதியில் அதனை சார்ந்த கிளை வாய்க்கல்களில் ஆகாயத்தாமரை மற்றும் வெங்காயத் தாமரை படர்ந்து கிடக்கிறது, இந்த ஆகாயத் தாமரைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட வில்லை.

காவிரி நீர்

இந்தநிலையில் மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைஞாயிறு வந்தடைந்தது. 

இந்த தண்ணீர் வயல்களுக்கு செல்வதற்கு ஆகாயத்தாமரைகள் தடையாக உள்ளது. இதனால் விவசாயிகள் பாசனம் செய்ய முடியாமல் சிரமப்பட்டனர்.

அரிச்சந்திரா நதி

இதனை அறிந்த தலைஞாயிறு, பிரிஞ்சு மூலை, காடந்தேத்தி உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாயிகள், இளைஞர்கள் கடந்த 3 நாட்களாக அரசை நம்பி பயனில்லை என தங்களுடைய வாழ்வாதாரத்தை காத்துக் கொள்ள தாங்களாகவே அரிச்சந்திரா நதியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை தற்காலிகமாக அகற்றினர். 

Latest District News in Tamil

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தேங்கி இருந்த ஆகாயத்தாமரைகளை அற்றிய விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு பொதுமக்கள் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended