19 கோடியில் சிறைவாசிகள் வாழ்வுக்காக புதிய பெட்ரோல் நிலையம்

JK

UPDATED: Aug 14, 2024, 9:00:27 AM

திருச்சி 

சிறைச்சாலையில் கைதிகளை கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் ஃப்ரீடம் செயல்பாட்டின் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் செய்யப்பட்டு வரும் பெண்கள் சிறைச்சாலை அருகில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய ஃபிரீடம் பெட்ரோல் பங்க் திறப்பு விழா நடைபெற்றது. 

Latest Trichy Breaking News

இந்நிகழ்வில் சட்டம் மற்றும் சிறைகள் சீர்திருத்தப் பணி துறை அமைச்சர் ரகுபதி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, சிறை துறை டிஜிபி மகேஸ்வர்தயாள், மதுரை சிறைத்துறை டிஐஜி பழனி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், 

திருச்சி மகளிர் தனி சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி, இந்தியன் ஆயில் தமிழ்நாடு புதுச்சேரி தலைமை செயல் இயக்குனர் அண்ணாதுரை, பெண்கள் சிறை அதிகாரிகள் உட்பட கலந்து கொண்டனர்.


Latest Trichy News Headlines & Updates

இன்று திறக்கப்பட்ட சில்லறை விற்பனை பெட்ரோல் நிலையம் ரூபாய் 19.1 கோடி செலவில் நிறுவப்பட்டு உள்ளது. இந்த பெட்ரோல் நிலையம் சிறைவாசிகளின் மறுவாழ்வு நோக்கத்திற்காக முற்றிலும் சிறைவாசிகள் கொண்டு இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended