- முகப்பு
- மாவட்டச் செய்தி
- உலக மலேரியா எதிர்ப்பு தினம் , எப்படி தடுப்பது ?
உலக மலேரியா எதிர்ப்பு தினம் , எப்படி தடுப்பது ?
ரமேஷ்
UPDATED: Apr 25, 2024, 4:19:59 AM
கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி உலக மலேரியா எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக மலேரியா நோயை கட்டுப்படுத்துதல் மற்றும் நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றை இந்நாள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.
இந்நிலையில் மலேரியா எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கொசுவை கையில் வைத்துக் கொண்டு மலேரியாவின் அறிகுறி குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து மலேரியா நோய் பரவக் காரணம் கொசுதான். எனவே, கொசு ஒழிப்பு மட்டுமே மலேரியா காய்ச்சலை குறைக்க ஒரே வழி. நீர்த்தேக்கத்தால் கொசு பெருகிடும், அதனால் மலேரியா நோய் வேகமாகப் பரவுகிறது.
கொசுவர்த்தி சில குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே, இரவில் கொசுவலை பயன்படுத்துவதன் மூலம் மலோரியா பாதிப்பைத் தவிர்க்க முடியும்.
குடிக்க அல்லது குளிக்க தண்ணீர் சேமித்து வைத்தால், அதை மூடி வைத்திருக்க வேண்டும். வீட்டில் உள்ள நீர்த் தொட்டிகளை வாரம் ஒரு முறை சுத்தம்செய்து கொசுக்கள் தங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
குளிர் காய்ச்சல், பசியின்மை, உடல் வலி, வாந்தி, வியர்வையுடன் தலைவலி, தசை வலி, தொண்டை புண், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிக்கல், உடல் நடுக்கம் வியர்த்தல் இவை தென்பட்டால் மலேரியா அறிகுறிகளாகும்.
உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று எளிய ரத்த பரிசோதனை மூலம் மலோரியா காய்ச்சலை கண்டறியலாம். என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில் சுகாதார ஆய்வாளர்கள் அஜித்குமார், விக்னேஷ், பரணிதரன், அவினாஷ், மற்றும் டெங்கு காய்ச்சல் பணியாளர்கள் உடன் இருந்தனர்.