நகை அடகு கடையில் எட்டு சவரன் போலி தங்க நகையை வைத்து மூன்று லட்சம் ஏமாற்றிய 3- பெண் உள்பட 6- பேர்
சுரேஷ் பாபு
UPDATED: Oct 9, 2024, 7:21:12 AM
திருவள்ளூர் மாவட்டம்
திருத்தணி தாலுகா கனகம்மா சத்திரம் பஜார் பகுதியில் நகை கடை வைத்து உள்ளவர் ரேகா ஆர்.ஆர். ஜுவல்லரி என்ற பெயரில் புதிய நகை விற்பனை மற்றும் நகைகள் அடமானம் வைத்து பணம் கொடுக்கும் தொழில் மேற்கொண்டு வருகிறார்
இவரது கடைக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு அருகிலுள்ள ஆந்திர மாநிலம் விஜயபுரம் பகுதியை சேர்ந்த லதா என்ற பெண் நகையை வைத்து பணம் வாங்க வந்திருக்கிறார் இதில் இரண்டு முறையாக 8 சவரன் நகையை வைத்து இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்
போலி நகை
இவர் சென்றவுடன் அந்த நகைகளை பரிசோதனை செய்து பார்த்த அடகு கடை உரிமையாளர் ரேகா பாதி தங்கம் பாதி போலியான நகை என்பதை தெரிந்து கொண்டு உடனடியாக அருகிலுள்ள கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மாலாவிடம் புகார் தெரிவித்துள்ளார்
புகாரை பதிவு செய்து கொண்ட போலீசார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த போலி நகையை அடமானம் வைத்த 1)லதா இவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது
Latest Crime News In Tamil
இவருக்கு உடந்தையாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மற்றும் கனகம்மாசத்திரம் பகுதியை சேர்ந்த 2) லோகன், 3) ராம மஞ்சுளு,4) சந்திரசேகர்,5) ரேகா, 6) ஹரிதா, இவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து ஆந்திர மாநிலம் மற்றும் தமிழகத்தில் பகுதிகளில் போலியான நகைகளை டெல்லியில் இருந்து பாதி தங்கம் கலந்த நகைகளை வாங்கி வந்து வங்கிகள் மற்றும் நகை அடமானக் கடைகளில் வைத்து பணமாக பெறுவது இவர்கள் வேலை என்று கூறப்படுகிறது
இவர்கள் இதுவரை பல்வேறு அடமான நகை கடைகளில் இதுபோன்று பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது
Breaking News Today In Tamil
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இந்த ஆறு பேரையும் கனகம்மாசத்திரம் போலீசார் கைது செய்து போலியான தங்க நகை 8 சவரனையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூன்று பெண்கள் மூன்று ஆண்கள் இவர்கள் அனைவரையும் திருத்தணி அரசு மருத்துவமனையில் மருத்துவரிடம் மருத்துவ சான்றிதழ் பெற்று திருத்தணி நீதிபதி முன்பு ஆஜர் செய்து நீதிபதி உத்தரவின் பேரில் இவர்கள் 6 பேரையும் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
காவல் துறை
இந்த சம்பவத்தில் கனகம்மாசத்திரம் போலீசார் புகார் கொடுத்த நகைக் கடை உரிமையாளர் ரேகா என்ற பெண்ணிடம் ஓசியில் இன்னோவா கார் சொகுசு கார் வாங்கி இதனை கனகம்மாசத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாலா காவல் நிலைய ஓட்டுநரை வைத்து சொகுசு காரை இந்த ஆறு குற்றவாளிகளை அழைத்துச் செல்ல பயன்படுத்தி உள்ளனர்.
புகார் கொடுத்த நபரிடமே குற்றவாளிகளை பிடிக்க கனகம்மா சத்திரம் உதவி ஆய்வாளர் மாலா சொகுசு காரை எடுத்து வர வைத்தது நியாயமா இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களிடமே மேலும் மன உளைச்சலை அதிகமாக்கும் காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகைக்கடை அடமானக் கடை உரிமையாளர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.