• முகப்பு
  • சென்னை
  • மாநகராட்சி மண்டல கூட்டத்திற்கு கையில் குண்டு பல்புகளுடன் வந்த கவுன்சிலரால் பரபரப்பு.

மாநகராட்சி மண்டல கூட்டத்திற்கு கையில் குண்டு பல்புகளுடன் வந்த கவுன்சிலரால் பரபரப்பு.

ஆனந்த்

UPDATED: Aug 21, 2024, 7:49:46 PM

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம்

மண்டலம்-11 அலுவலகத்தில் இன்று மண்டல குழு குழு தலைவர் நொளம்பூர் ராஜன் தலைமையில் மாதந்திர மண்டல கூட்டம் நடைபெற்றது.

இதில் மாமன்ற கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 145 வது வார்டு மாமன்ற அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் கூட்டத்தில் பங்கேற்று மின்வாரிய அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்ததார்.

ADMK

அதில் அதில் தனது வார்டில் மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்து உள்ளதாகவும் மிகவும் சேதம் அடைந்து உள்ளதால் மழைக்காலங்கள் வர உள்ள நிலையில் சிறிய காற்று அடித்தாலே அடியோடு மின்கம்பங்கள் சாய்ந்து சாலையில் தெரு பகுதிகளில் விழுவதாகவும் பலமுறை மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தோம் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டை முன் வைத்தார் 

மேலும் தெரு பகுதியில் விழுந்து கிடந்த மின் கம்பங்களின் வீடியோ பதிவையும் சேமடைந்துள்ள மின்கம்பங்கள் புகைபடங்களையும் ஆதாரத்துடன் காட்டி குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக

மின் கம்பங்களை மாற்றாத அரசு அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கூட்டத்தில் குண்டு பல்புகளுடன் வந்து கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

அதிமுக கவுன்சிலர் ஒருவர் மண்டல கூட்டத்திற்கு கையில் குண்டு பல்புடன் வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்களுக்கு அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் அளித்த பேட்டியில் :

நான் கவுன்சிலராக பதவி ஏற்ற நாள் முதல் மின்வாரிய அதிகாரிகளுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் ஆனால் அவற்றில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

பழுதடைந்த மின்கம்பங்கள்

குறிப்பாக 145 ஆவது வார்டில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள் கீழே விழும் அபாயம் இருப்பதாகவும் அதை மாற்றி தருமாறும் கோரிக்கை விடுத்து பல மாதங்கள் கடந்தும் இதுவரை புதுகம்பங்கள் நடப்படவில்லை என்றார். 

ஆனால் மக்கள் யாரேனும் பணம் கொடுத்து மின்கம்பங்களை மாற்றுமாறு கூறினால் மட்டும் உடனே நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இவ்வாறாக மின்வாரிய அதிகாரிகள் முழுவதும் பணம் வாங்கிக் கொண்டு மட்டுமே வேலை செய்வதாக அவர் குறை கூறினார்.

அண்மையில் கூட ஒரு மின்கம்பம் கீழே சாய்ந்ததாக வீடியோ ஆதாரத்தை காட்டிய அவர், அந்த நேரம் குழந்தைகள் அல்லது வேறு யாரேனும் வந்திருந்தால் கண்டிப்பாக உயிர் பலி நேர்ந்திருக்கும் என்றும், இது தொடர்பாக உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அத்துடன் தனது கைகளில் இருந்த இரண்டு குண்டு பல்புகளை காட்டிய அவர், இந்த எரியாத பல்புகள் போல தான் மின்வாரிய அதிகாரிகள் செயல்படுவதாக விமர்சித்தார்.

 

VIDEOS

Recommended