• முகப்பு
  • லஞ்சம்
  • விவசாயியிடம் பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.3000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புதுறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.

விவசாயியிடம் பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.3000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புதுறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.

ரமேஷ்

UPDATED: Jul 20, 2024, 7:12:27 AM

லஞ்சம்

கும்பகோணம் அருகே இன்னம்பூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் மதியழகன். இவரிடம் அந்த கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்ற விவசாயி பட்டா மாறுதலுக்காக சென்றுள்ளார். அவரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. 

ஆனால் லஞ்சம் கொடுக்க மறுத்தால் அவரை பல நாட்களாக அலைக்கழித்து வந்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த விவசாயி மாரியப்பன் இதுகுறித்து தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

Latest District News in Tamil

இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் மதியழகனிடம் தன்னிடம் ரூ.5 ஆயிரம் இல்லை ரூ.3 ஆயிரம் மட்டுமே இருக்கிறது. அதனை வாங்கிக் கொண்டு பட்டாவில் பெயர் மாற்றம் செய்து கொடுக்குமாறு மாரியப்பன் கூறியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்துள்ளார். 

News

பணத்தை வாங்கி எண்ணிக் கொண்டிருந்த மதியழகனை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். 

இதையடுத்து அவரை கும்பகோணம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி, பின்னர் கைது செய்தனர்.

 

VIDEOS

Recommended