• முகப்பு
  • லஞ்சம்
  • மின் இணைப்பை இடமாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் மற்றும் வயர் மேன்

மின் இணைப்பை இடமாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் மற்றும் வயர் மேன்

லட்சுமி காந்த்

UPDATED: Nov 29, 2024, 9:06:29 AM

காஞ்சிபுரம் மாவட்டம்

தாமல் அடுத்த மாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரர் (வயது 28). இவர் தனது இடத்தில் புதிதாக வீடு கட்டுவதற்காக ஏற்கனவே இருந்த மின் இணைப்பை இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளார். 

அதற்காக தாமல் மின்வாரிய இளநிலை செயற்பொறியாளர் அலுவலகத்தில் உதவி பொறியாளர் அசோக்ராஜ் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார். ஆன்லைன் மூலமாக மின் இணைப்பு இடமாற்றம் செய்ய 1550.00 ரூபாய் கட்டணம் செலுத்த கூறியுள்ளார். 

லஞ்சம்

ஆன்லைனில் பணத்தை கட்டி விட்டு அசோக் ராஜை தொடர்பு கொண்ட பிரபாகரிடம் , மீட்டர் மற்றும் டேரிப் கட்டண விகிதம் மாற்றிதர நாலாயிரம் ரூபாய் பணத்தை வயர் மேன் சாந்தமூர்த்தியிடம் கொடுக்குமாறு அசோக்ராஜ் கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத, பிரபாகரர், இதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் அளித்துள்ளார், புகாரின் அடிப்படையில் ரசாயனம் தடவிய நோட்டுக்களை பிரபாகரிடம் கொடுத்து, மின்வாரிய அலுவலகத்தில் கொடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறியுள்ளனர். 

லஞ்ச ஒழிப்புத்துறை 

அதனடிப்படையில் பிரபாகர் இன்று காலை ரசாயனம் தடவிய நோட்டுகளை வயர்மேன் சாந்தமூர்த்தியிடம் கொடுக்கும்போது, லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் மறைந்திருந்த போலீசார், அசோக் ராஜ் மற்றும் சாந்த மூர்த்தி ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அவர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

VIDEOS

Recommended