• முகப்பு
  • குற்றம்
  • ஹிந்து பெயரில் சுவற்றின் பெயர் முஸ்லிம் நபருடைய புகைப்படம் வைத்து பில் மாற்றி பல லட்சம் முறைகேடு.

ஹிந்து பெயரில் சுவற்றின் பெயர் முஸ்லிம் நபருடைய புகைப்படம் வைத்து பில் மாற்றி பல லட்சம் முறைகேடு.

சண்முகம்

UPDATED: Oct 13, 2024, 8:27:41 AM

கடலூர் மாவட்டம்

சிதம்பரம் அருகே உள்ள டி.நெடுஞ்சேரி ஊராட்சியில் கடந்த 2020 மற்றும் 24 ஆம் ஆண்டு இலவச கழிவறை கட்டுவதில் முறைகேடு நடந்துள்ளதாக டி.நெடுஞ்சேரி பகுதி சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தமிழ்ச்செல்வி என்பவர் பலமுறை அரசு அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை

மேலும் கடந்த மாதம் தமிழக முதலமைச்சர் குறைதீர்க்க முகாமில் மனு கொடுத்த இருந்த நிலையில் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்காததால்  தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் கேட்டிருந்தார் அதில்

அரசு வேலையில் உள்ளவர்கள் முதல் பல பெயர்களில் போட்டோக்களை மாற்றி பல போலி பெயர்களில் பல லட்ச ரூபாய் கையாடல் செய்திருப்பது தெரியவந்துள்ளது

இதனால் அதிர்ந்து போன கிராம பொதுமக்கள் மிகவும் மன உளைச்சலில் உள்ளார்கள் இதுகுறித்து முறையாக கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டு வருகிறது

மேலும் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் தமிழக முதல்வர் பெயரை கெடுக்கும் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது 

மேலும் கழிவறை கட்டி முடித்தவுடன் இறுதியில் சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படத்தை ஜிபிஎஸ் கருவி மூலம் எடுத்து அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய உடன் அவர்களுக்கு வங்கிக் கணக்கில் பணம் அரசு மூலம் செலுத்தப்படும் ஆனால் இங்கு யாருடைய வங்கியிலும் பணம் வரவில்லை. 

ஹிந்து பெயரில் சுவற்றின் பெயர் முஸ்லிம் நபருடைய புகைப்படம் வைத்து பில் மாற்றியது தெரிய வந்தது மேலும் மற்றும் வெளியூர் நபர்களின் புகைப்படத்தை வைத்தும் அதே கிராமத்தைச் சார்ந்தவர்களின் பெயர்களை சேர்த்தும் ஆள் மாறாட்டம் செய்தது தெரியவந்தது. 

மேலும் அரசு வேலையில் உள்ளவர்கள் பெயரில் பில் போட்டு பல லட்ச ரூபாய் கையாடல் நடைபெற்றுள்ளது எங்கள் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்

 

VIDEOS

Recommended