மலேசியா கோலாலம்பூரில் கோலாகலமாக இடம்பெற்ற "19 ஆம் ஆண்டுக்கான மெஸ்பன் விருது விழா - 2024"
ஐ. ஏ. காதிர் கான்
UPDATED: Dec 19, 2024, 2:22:16 AM
மெஸ்பன் நிறுவனத்தின் "19 ஆம் ஆண்டுக்கான மெஸ்பன் விருது விழா - 2024", மலேசியா - கோலாலம்பூர் தலைநகர் சிலாங்கூர் மாநிலம் காஜாங்கில் அமைந்துள்ள ஆர்.எச்.ஆர். ஐந்து நட்சத்திர ஹோட்டல் வரவேற்பு மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
கலைமாமணி டாக்டர் எம். அன்பா மற்றும் டாக்டர் எம். பார்த்திபன் முருகையா ஆகியோரது தலைமையில் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான மெஸ்பன் விருது விழாவில், மலேசிய மற்றும் இந்திய நாடுகளைச் சேர்ந்த 24 பேர்கள் சிறப்பு விருதுகளைப் பெற்றனர்.
இதில் 16 பேருக்கு "ஐகோன்" விருதுகளும், 8 பேருக்கு கல்வி, கலை, வர்த்தகம், சமூகம் மற்றும் பொதுத் தொண்டு சார்ந்த துறைகளுக்கான "கலைமாமணி" விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன என, மெஸ்பன் இணை நிறுவனர் டாக்டர் எம். பார்த்திபன் முருகையா தெரிவித்தார்.
கல்வித்துறைப் பணிக்காக - டாக்டர் கோமதி சங்கரன் (PHD), பரமேஸ்வரி சிவலிங்கம், கலைத்துறைப் பணிக்காக - கவிப்பாவை கார்த்திக், பொதுத்தொண்டுத் துறையில் - டாக்டர் குர்மீத் சிங் சேவா சிங், டாக்டர் முஹம்மது நாசீர் மொஹிதீன், டாக்டர் ஹாஜி ஹபீப் ரஹ்மான், வர்த்தகத்
துறையில் - மகேந்திரன் நடராஜா, ஆன்மீகத் துறையில் - சிவஸ்ரீ எஸ்.கே. சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் ஆகியோர் "கலைமாமணி" விருதுகளைப் பெற்றனர்.
இதேவேளை, "கலைமாமணி" விக்னேஸ்வரன் அனந்தராசா,
"கலைமாமணி" தமயந்தி சுந்தர் ராஜா, "கலைமாமணி" ஜான்சன் ஃபிலிக்சன், "கலைமாமணி" டாக்டர் வனிதா முத்துகுமார் (AMN), "கலைமாமணி" வடிவேலு இலட்சுமணன், "கலைமாமணி" பிலோமீனா லூர்துசாமி, "கலைமாமணி" எம். ஜவீந்திரகுமார், "கலைமாமணி" சரவணன் நாகுரு, புஸ்பாவதி மாரிமுத்து, ராதையின் அன்பு முகவரி @ ராம், சிவாணி பார்த்திபன் ஆகியோர் "ஐகோன்" விருதுகளைப் பெற்றுக்கொண்டனர் என, மெஸ்பன் விருது விழா எம்டி எம். அன்பா குறிப்பிட்டார்.
இவ்விருது வழங்கல் விழாவில், கவிஞர் பெர்னாட்ஷா, பாடகர் ஸ்ரீ சண்முகநாதன், எஸ்.பி. மணிவாசகம், மூத்த "கலைமாமணிகள்" "சேவைத் திலகம்" டாக்டர் சங்கிலி முத்து, கம்ப்யூட்டர் புகாரி, டாக்டர் எம்.ஜி.ஆர். கமல்ராஜ், டாக்டர் எல்.ஆர். சிவபாலன் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட கலைஞர்கள், ஆர்வலர்கள் எனப் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.