மியன்மார் - ரோஹிங்ய நாட்டை சேர்ந்த 115 நபர்கள் திருமலைக்கு மரணித்த 5 பேர்கள் கடலில் வீசப்பட்டனர்
திருகோனமலை - ஏ. எம். கீத்
UPDATED: Dec 20, 2024, 10:54:44 AM
மியன்மார் - ரோஹிங்ய நாட்டை சேர்ந்த 115 நபர்கள் படகு மூலம் இலங்கை கடற்பரப்பின் முல்லை தீவு பகுதியில் நேற்று (19)கடற்படை மீனவர்கள் இணைந்து மீட்டனர்.. இவர்கள் இன்று(20) திருக்கோணமலை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் திருகோணமலை அஷ்ரப் இறங்கு துறையில் அவர்களுக்கான மருத்துவ பரிசோதனை இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த படகில் 120 நபர்கள் பயணித்திருந்த நிலையில் ஐவர் சர்வதேச கடற்பரப்பின் நடுக்கடலில் படகில் உயிரிழந்த மையால் அவர்களை கடலில் வீசியதாக ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது.
இதில் படகு ஓட்டுனர், உதவியாளர் என 12 நபர்களை ஆட்கடத்தல் எனும் பெயரில் விசாரனை இடம் பெறுவதுடன் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இவர்கள் இலங்கைக்கு வரும் எண்ணத்தில் பயணிக்கவில்லை எனவும் தெரியவருகிறது..
குறித்த மிகுதியான 103 நபர்களையும் திருகோணமலை மாவட்ட செயலகம் ஊடாக திருகோணமலை தி/ஜமாலியா வித்தியாலயத்தில் தங்க வைக்க ஏற்பாடுகள் இடம் பெறுவதாக தெரிவித்தனர்...
இதில் படகு ஓட்டுனர் உதவியாளர் என 12 நபர்களும் விசாரனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.. குறித்த படகில் சிறுவர்கள், பெண்களும் உள்ளடங்குவர்.