• முகப்பு
  • இலங்கை
  • இலங்கைக்குள் நுழைந்துள்ள இஸ்ரேலிய சிப்பாயினை வெளியேற்ற கோறி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இலங்கைக்குள் நுழைந்துள்ள இஸ்ரேலிய சிப்பாயினை வெளியேற்ற கோறி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Dec 20, 2024, 11:06:35 AM

இலங்கையில் தங்கியிருக்கும் இஸ்ரேலிய ராணுவ குற்றவாளிகளை உடனே வெளியேற்று ! பலஸ்தீனுக்கு எதிரான இனப்படுகொலைகளை உடனே நிறுத்து ! போன்ற பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் சிவில் அமைப்புகள் இந்த கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

original/dofoto_20241220_145315545
இலங்கை கொல்லுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

 இதில் தமிழ் முஸ்லிம் சிங்களம் என்ற பேதம் இன்றி இஸ்ரேலின் படுகொலை தொடர்பிலும் அமெரிக்க இஸ்ரேலுக்கு வழங்கி வருகின்ற ஆதரவு தொடர்பிலும் தங்களது வன்மையான கண்டனத்தை இதன் போது அவர்கள் வெளியிட்டதை அவதானிக்க முடிந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கலீல் ரஹ்மான்,  முன்னிலை சோசலிசக் கட்சியின் துமிந்த நாகமுவ, மக்கள் போராட்ட அமைப்பின் அழைப்பாளர் சட்டத்தரணி.ஸ்வஸ்திகா, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் கலீலுர் ரஹ்மான், முஸ்லிம் முற்போக்கு சக்தியின் மிஃலால் மௌலவி உள்ளிட்டேர்களும் கலந்துகொண்டனர்.

 இதன் போது கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கலீலுர் ரஹ்மான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார் -

 

VIDEOS

Recommended