புத்தளம் வண்ணாத்திவில்லு பகுதியில் காட்டு யானை ஒன்று சடலமாக மீட்ப்பு
ஏ.என்.எம் முஸ்பிக் - புத்தளம்
UPDATED: Dec 21, 2024, 6:31:24 AM
புத்தளம் வண்ணாத்திவில்லு பகுதியில் காட்டு யானை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்குச் சென்று உயிரிழந்த யானையை பார்வையிட்டனர்.
குறித்த யானை கைவிடப்பட்ட விவசாய கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.
ALSO READ | காய்ச்சல் காலம் வந்துவிட்டது. நீங்கள் தயாரா?
இவ்வாறு உயிரிழந்த யானை 30 வயது என மதிக்கப்பட்டுள்ளதாகவும் 8 அடி உயரம் கொண்டு காணப்படுவதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்த யானைக்கு மிருக வைத்தியரினால் உடற்கூற்று பரிசோதனை முன்னெடுக்க உள்ளதாக இதன்போது தெரிவித்தனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு