• முகப்பு
  • இலங்கை
  • எதிர்பாரத்த அளவில் அரிசி இறக்குமதி இல்லை - காலம் நீடிப்பு என்கிறது அரசு

எதிர்பாரத்த அளவில் அரிசி இறக்குமதி இல்லை - காலம் நீடிப்பு என்கிறது அரசு

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Dec 20, 2024, 5:37:16 AM

அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட காலத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வார இறுதியில் வெளியிடப்பட உள்ளது.

எவ்வாறாயினும், அரிசி இறக்குமதிக்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று (20ஆம் திகதி) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.original/img-20241220-wa0021
அந்தக் காலப்பகுதியில் எழுபதாயிரம் மெற்றிக் தொன் அரிசியை அரசாங்கம் இறக்குமதி செய்ய எதிர்பார்த்திருந்த போதிலும், நேற்று (19ஆம் திகதி) வரையில் பதினாறாயிரம் மெற்றிக் தொன் அரிசியே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, அரிசி இறக்குமதியாளர்களுக்கும், அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கும் இடையில் நேற்று (19) வர்த்தக அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள 65 ரூபா வரித் தொகையை 15 ரூபாவினால் குறைக்குமாறும், அரிசியின் விலையை குறைக்க முடியாது என இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் அந்த இரண்டு கோரிக்கைகளையும் அமைச்சர் நிராகரித்துள்ளார்.

VIDEOS

Recommended