தமிழ் தாய் வாழ்த்தை நீக்கி விடுவோம் என சீமான் பேசுவது வேதனைக்குரியது - அன்பில் மகேஸ்.

JK

UPDATED: Oct 20, 2024, 9:12:39 AM

திருச்சி

பள்ளிகல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம், கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு நடத்தப்பட்டது.

கல்வித்திறன் மற்றும் கற்பித்தல் திறன் அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட தேர்வில் மாநிலம் முழுதும் இருந்து, 8,096 ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

இணையவழி முதல் சுற்று தேர்வில், 2,008 பேரும், இரண்டாம் கட்ட தேர்வில் இவர்களில் இருந்து, 992 பேரும் தேர்வாகினர். இறுதி சுற்றில், 75சதவீதம் அதற்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற, 380 ஆசிரியர்கள் மாநில அரசின் கனவு ஆசிரியர்களாக தேர்வாகினர்.

 

இவர்கள் கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, 75 முதல், 89 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் (வரிசை எண் 56 முதல் 380 வரை) 325 ஆசிரியர்கள் ஏப்ரல் மாதம் இரு குழுக்களாக மாநிலம், டேராடூன் சென்று திரும்பினர்.

இந்நிலையில், கனவு ஆசிரியர் விருதுக்கு, சிரத்தையெடுத்து தயாராகி, தேர்வில், 90 முதல், நுாறு சதவீத மதிப்பெண் பெற்ற, ஒன்று முதல், 54வரையிலான 54 ஆசிரியர்கள் France க்கு வரும் 23ம் தேதி முதலில் 28ம் தேதி வரை சுற்றுலா செல்கின்றனர்.

கல்வி, கலை, தொழில்நுட்பம், பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் france க்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சியில் நடைபெற்ற விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று அவர்களது பயணம் சிறக்க வாழ்த்தினார்.

அதில் பொதுவாக சுற்றுலாவிற்கு ஆசிரியர்கள் மாணவர்களை அழைத்துச் செல்வது வழக்கம்.

ஆனால் நான் ஆசிரியர்களாகிய உங்களை மாணவனாகிய நான் அழைத்துச் செல்கிறேன் என பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர்,

தொடக்கக்கல்வி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியை சார்ந்த ஆசிரியர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 60 பேர் பிரான்ஸ் நாட்டிற்கு சென்று கல்வி சார்ந்த, வரலாற்று சார்ந்த சுற்றுலா இடங்களை பார்க்க உள்ளோம்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பொழுது ஆசிரியர் சார்ந்து பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அங்கீகாரம் செய்யும் விதமாகவும் முதல் முறையாக ஆசிரியர்களை வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்ல உள்ளோம்.

பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவு தொடர்பான அறிக்கை குறித்து பேசியவர், 

இதை பொறுத்தவரை சுகாதாரத் துறையுடன் இது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு ஊட்டச்சத்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பொழுது அதற்கு தகுந்தார் போல் மாத்திரைகள் வழங்கப்படும். சில நேரங்களில் மாத்திரைகளை கொடுக்க தெரியாமல் கொடுத்து சோகமான நிகழ்வுகள் நடைபெறுகிறது.

அது மாதிரி நடைபெறக்கூடாது என்பதற்காக தொடர்ந்து வலியுறுத்தி, சரியான முறையில் ஊட்டச்சத்து வழங்கவும் சில சமயங்களில் வயதிற்கு தகுந்த வளர்ச்சி குழந்தைகளுக்கு இல்லாத நிலையில், அதுபோன்ற குழந்தைகளையும் கண்டறிந்து பிள்ளைகளின் உடல்நலம் சார்ந்து ஒவ்வொன்றையும் அனைத்தையும் செய்யக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

சீமான்

இது மட்டுமின்றி மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் கண்டறிந்து அவர்களையும் கல்வி அளிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் 

கல்வியும், சுகாதாரமும் இரண்டு கண்கள் என முதலமைச்சர் தெரிவிப்பது போல இரண்டையும் கவனமாக பார்த்து வருகிறோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து நீக்கப்படும் என்ற சீமானின் கருத்துக்கு பதிலளித்தவர்.

தமிழ்நாடு அரசியல் என்று வரும் பொழுது கல்வியில் தான் தொடங்குகிறது. அப்படி வரும்பொழுது தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி விடுவோம் என அவர் பேசுவது வேதனைக்குரியதாக உள்ளது.

பாராட்டுவதாக இருந்தாலும் திட்டுவதாக இருந்தாலும் தமிழ் மொழியில் பேசும் அவர் இப்படி சொல்வது வேதனைக்குரியது. 

கோத்தாரி குழுமம் பரிந்துரை செய்துள்ளதை காட்டிலுமே கூடுதலான நிதிதான் ஒதுக்கி வருகிறோம், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பொழுது 32 ஆயிரம் கோடியில் ஆரம்பித்து தற்போது 42 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்கிறோம் என்கிற பொழுது ஒவ்வொரு ஆண்டும் அதன் வளர்ச்சி அதிகமாக தான் இருக்கிறது என தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended