- முகப்பு
- மாவட்டச் செய்தி
- நாகை அருகே மீட்கப்பட்ட கோவில் நிலத்தில் எல்லை கற்கள் நட்டு பூஜை செய்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்.
நாகை அருகே மீட்கப்பட்ட கோவில் நிலத்தில் எல்லை கற்கள் நட்டு பூஜை செய்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்.
செ. சீனிவாசன்
UPDATED: Aug 1, 2024, 9:10:43 AM
நாகப்பட்டினம் மாவட்டம்
ஐவநல்லூர் கிராமத்தில் அருள்மிகு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமான இடங்கள் கிராமத்தை சுற்றி உள்ளது.
இந்த நிலங்களை தனி நபர்கள் ஆக்கிரமித்து வைத்திருந்தனர் இந்நிலையில் கோவிலுக்கு சொந்தமான இடங்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்ட அதிகாரிகள் சுமார் 4.50 கோடி மதிப்பிலான 1.50 ஏக்கர் நிலங்களை மீட்டனர்.
கோயில் நிலம் ஆக்கிரமிப்பு
மீட்கப்பட்ட நிலங்களில் இந்து சமய அறநிலையத் துறை இணை இயக்குனர் குமேரசன், துணை ஆணையர் ராணி, தனி வட்டாட்சியர் அமுதா தலைமையில் கோவிலுக்கு சொந்த மான இடம் என அறிவிப்பு பலகை வைத்து எல்லை கற்களை நட்டனர்.
தொடர்ந்து மீட்கப்பட்ட நிலத்தில் தேங்காய் உடைத்தும், கற்பூரம் காட்டி பூஜை செய்தனர்.
நாகையில் 4. 50 கோடி மதிப்பிலான கோவில் நிலங்களை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அதிடியாக மீட்டனர்.