• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • வைகைஅணையில் இருந்து உசிலம்பட்டி பகுதிக்கு செல்லும் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு.

வைகைஅணையில் இருந்து உசிலம்பட்டி பகுதிக்கு செல்லும் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு.

ராஜா

UPDATED: Nov 21, 2024, 2:55:00 PM

தேனி மாவட்டம்

ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகைஅணையில் இருந்து கூட்டுகுடிநீர் திட்டகுழாய்கள் மூலம் தேனி நகராட்சி ஆண்டிபட்டி பேரூராட்சி மற்றும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. 

வைகை அணை

இந்நிலையில் வைகைஅணையில் இருந்து உசிலம்பட்டி பகுதிக்கு செல்லும் கூட்டுக் குடிநீர்திட்ட குழாயில் டி.வி.ரெங்கநாதபுரம் அருகே இரவில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக 10 அடி உயரத்திற்கு தண்ணீர் உயரமாக பீச்சி அடித்து அருகே உள்ள தரிசு நிலங்களில் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேங்கி வீணானது.

 

VIDEOS

RELATED NEWS

Recommended