வீட்டை யாரும் இடிக்க முடியாது திருவேற்காட்டில் பொதுமக்களை சந்தித்த பிறகு சீமான் பேட்டி

ஆனந்த்

UPDATED: Nov 19, 2024, 8:14:04 PM

சென்னை

திருவேற்காடு அடுத்த கோலடி ஏரியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்க வருவாய்த்துறை நோட்டீஸ் ஒட்டியுள்ளது இதற்கு பயந்து சங்கர் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று சங்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்த பொது மக்களை சந்தித்து ஆறுதல் கூறி கொண்டிருந்தார்

அப்பொழுது திடீரென அவர் முன்பு வைக்கப்பட்டிருந்த டேபிள் திடீரென அவர் காலின் மீது விழுந்தது இதனால் காலில் காயம் ஏற்பட்டு சற்று வலியுடன் அங்கிருந்து தாங்கியபடி நடந்து சென்றார் இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் :

இது போன்று பல வீடுகளை எடுக்கும் போராட்டத்தில் பங்கேற்ற ஒருவன் நான்  நீங்கள் அழுது கதறி வீட்டை இடிப்பை தடுக்க முடியாது உங்களுக்கு யாரும் இல்லை என்று நினைக்க வேண்டாம் நான் இருக்கிறேன் என் பின்னாடி பல லட்சம் மக்கள் இருப்பார்கள் நம்மை மீறி தான் இந்த வீட்டை இடிப்பார்கள்

ஆக்கிரமிப்பு என்றால் இங்கு மின் இணைப்பு, குடும்ப அட்டை, வீட்டு உரிமை வழங்கியது யார்  மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏவிற்கு தெரியாமல் இவர்கள் குடியேறி விட்டார்களா

நீதிமன்றம் சொல்லிவிட்டது என்று கூறி பல வீடுகளை இடித்து வெளியேற்றி உள்ளார்கள்

இந்த வீட்டை இடிக்க விடமாட்டோம் இடிக்க போவதில்லை தைரியமாக இருங்கள் ஏரி ஆக்கிரமிப்பு என்று கூறியவர்கள் தான் பரந்தூரில் 12 ஏரியை ஆக்கிரமிப்பு செய்து விமான நிலையம் கட்ட உள்ளனர்

நான் ஒரு வழக்கு போட்டால் நீதிமன்றம் இடிக்க சொல்லுமா அங்கு அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், பணக்காரர்கள் வாழ்கின்றனர்

ஒரு நாள் இங்குள்ள ஆட்சியாளரும் அகதி போல் அலைய வேண்டிய நிலை வரும் என பேசினார்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended