மணிப்பூர் கலவரத்தை உருவாக்கியவர்கள் பாரதிய ஜனதா கட்சியினர் - கே.எஸ். அழகிரி
சண்முகம்
UPDATED: Nov 20, 2024, 8:32:29 AM
கடலூர் மாவட்டம்
சிதம்பரத்தில் முன்னாள் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அரசை பாரத பிரதமரை மோடியை வன்மையாக கண்டிக்கின்றேன் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றால் அனைவருக்கும் ஜாதி வாரியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் இதை தான் எங்கள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்
ஆனால் பாரத பிரதமர் இதை வேண்டுமென்றே பொய் பிரச்சாரம் செய்கிறார் செய்தியாளர்கள் கேள்வியில் வருகின்ற 2026 இல் தொல் திருமாவளவன் அவர்கள் நாங்கள் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என்று கூறியுள்ளார்
இந்தியா கூட்டணி
காங்கிரஸ் கட்சி நிலைபாடு என்ன ?. . 2026 இல் தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது ஏனென்றால் கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக முதல்வர் இந்த கூட்டணியை மிகுந்த கொள்கை ரீதியாக தமிழக முதல்வர் அவர்கள் நடத்தி வருகிறார்கள்
சென்ற நாடாளுமன்ற தேர்தலிலேயே தொகுதிகளை பங்கீடு செய்வதில் சில பிரச்சனைகள் வந்தது ஆனால் தமிழக முதல்வர் அனைத்து தோழமைக் கட்சியும் அரவணைத்து நிதானத்துடன் 40 தொகுதிகளிலும் கூட்டணி கட்சியும் சேர்ந்து மாபெரும் வெற்றி பெற்றது இந்தியாவே இதை திரும்பி பார்த்தது மற்றும் எங்கள் கூட்டணியை மக்கள் மிகவும் விரும்புகிறார்கள்
கே.எஸ். அழகிரி
ரேஷன் கார்டு உள்ள அனைவருக்குமே ஆயிரம் ரூபாய் வீதம் தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது இது ஒரு நல்ல திட்டம் ஏனென்றால் அமெரிக்காவில் கூட ஒரு பசுமாடு வளர்த்தால் கூட அதற்கு மானியம் தருகிறார்கள் அது எப்பொழுதும் தமிழகத்தில் தர முடியாது இருந்தாலும் தமிழக முதல்வர் சிறப்பான முறையில் திட்டங்களை தீட்டுகிறார் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கிராமப்புறங்களில் மிகவும் அருமையாக உள்ளது நான் உறுதியாக கூறுகிறேன்
தமிழகத்தில் கொள்கை ரீதியான கூட்டணி தான் வெற்றி பெற முடியும் அணி வெற்றி பெற முடியாது தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலுவாக இருப்பதால் மத்திய அரசை மதவாத கொள்கையை எதிர்க்கும் கூட்டணியாக உள்ளது ஆட்சியில் உள்ளோம் அதனால் மத்திய அரசின் தயவு எங்களுக்கு தேவை என்பதை தமிழக அரசு என்றுமே நினைத்துப் பார்த்ததில்லை எதிர்க்க வேண்டிய நேரங்களில் எதிர்க்கின்றார்கள் ஆதரிக்க வேண்டிய நேரங்களில் ஆதரிக்கிறார்கள்
காங்கிரஸ்
அதிகாரத்தில் பங்கு என்பது ஏற்றுக் கொள்ள வேண்டியது தான் இதில் ஒன்றும் தவறு இல்லை ஏனென்றால் அதிகாரத்தில் பங்கு தந்தால் இன்னும் ஆட்சி சிறப்பாக இருக்கும் அதை முடிவு செய்ய வேண்டியவர்கள் யார் என்றால் காங்கிரஸ் கட்சியின் தலைமையும் திராவிட கட்சியின் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தான்
எல்லா பிரச்சனைக்கும் எப்படி முடிவு எடுக்கின்றார்களோ அதே போல் அவர்கள் தான் எடுக்க வேண்டும் இன்றைய தினம் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார் அவர் அறிக்கை மிகவும் கொச்சையாக உள்ளது என்னிடத்தில் ஒரு மிட்டாய் உள்ளது எல்லோரும் என்னிடத்தில் ஓடி வாருங்கள் உங்களுக்கு நான் பங்கு தருகிறேன் இது ஒரு பெருந்தன்மையும் கிடையாது ஒரு நாகரிகமும் கிடையாது என்று கூறுவது ஒரு நாகரீகம் அற்ற பேச்சு உங்களிடம் கூட்டணிக்கு வருகின்ற கட்சிகளை நீங்கள் அமர்ந்து பேச வேண்டும் இதைத்தான் எங்கள் காங்கிரஸ் கட்சி செய்கிறது
பிஜேபி
எந்த முடிவெடுத்தாலும் எங்கள் கட்சி தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் மணிப்பூர் கலவரத்தை உருவாக்கியவர்கள் பாரதிய ஜனதா எங்களுக்கு மாநிலங்களில் தங்களுக்கு ஒரு செல்வாக்கான வலிமை வேண்டும் என்று முடிவெடுத்து செய்தார்கள் பழங்குடி மக்கள் இவர்கள்தான் அடித்துக் கொண்டு இருக்கிறார்கள் இது சண்டை அல்ல ஒரு யுத்தம்
உங்கள் பாதுகாப்பில் இருந்த ஆறு பேர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள் அப்படி என்றால் அங்கே சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது இதைப்பற்றி தீவிரமாக சிந்திக்காமல் மோடி அவர்கள் வெளிநாட்டில் சுற்றுப்பயணத்தில் இருக்கின்றார் தனது இந்தியாவில் ஒரு பகுதி பற்றி கொண்டு இருக்கிறது அதை பற்றி எந்த கவலையும் படாத ஒரு பிரதமர் 20 நிமிடத்தில் அங்கே சென்று என்ன நடந்தது என்பதை கூட பாரத பிரதமர் கேட்கவில்லை இதை இந்திய மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று கூறினார்.