- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ஏகனாபுரம் ஊராட்சியை சேர்ந்த 35 வயதுடைய ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா கணபதி தற்கொலை.
ஏகனாபுரம் ஊராட்சியை சேர்ந்த 35 வயதுடைய ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா கணபதி தற்கொலை.
லட்சுமிகாந்த்
UPDATED: Nov 19, 2024, 9:51:46 AM
காஞ்சிபுரம் மாவட்டம்
ஏகனாபுரம் ஊராட்சியை சேர்ந்தவர் கணபதி. இவருடைய மனைவி திவ்யா கணபதி (வயது 35). ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக திவ்யா கணபதி செயலாற்றி வருகிறார்.
கணபதி திவ்யா தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர்.
கணபதி பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளராகவும் , பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்ட குழுவின் முக்கிய நிர்வாகியாகவும் செயல்பட்டு வருகிறார்.
Latest Kanchipuram News Today In Tamil
திவ்யா கணபதி அவர்கள் சில மாதங்களாகவே, தன்னுடன் நெருங்கி பழகும் உறவினர் மற்றும் நண்பர்களிடம் விமான நிலைய திட்டத்திற்க்காக நம்முடைய கிராமத்தில் உள்ள குடியிருப்புகளும் விளை நிலங்களும் எடுக்கப்பட உள்ளது.
நம் கிராமமும் அத்திப்பட்டு போல வரைபடத்தில் இருந்து காணாமல் போகுமே என அவ்வப்போது மன வேதனைப்பட்டு வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
தற்கொலை
கடுமையான மன உளைச்சல் மூலம் உடல்நலம் பாதிப்படைந்து மனவேதனை அடைந்த திவ்யா கணபதி அவர்கள் இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்ட குழுவினர் தங்களுடைய whatsapp குழுவில் பதிவிட்டதால் 13 கிராமங்களிலும் சோகம் நிலவுகிறது.
ஏகனாபுரம் ஊராட்சி
காவல்துறையினரால் எந்த நல்லதும் நம்முடைய கிராமத்துக்கு நடைபெறவில்லையே என்ற ஆதங்கத்தில் காவல்துறையினருக்கு தெரிவிக்காமலே திவ்யா அவர்களின் உடலை அடக்கம் செய்யமுற்பட்டனர்.
தகவல் தெரிந்து வந்த காவல்துறையினர் திவ்யா அவர்களின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றார்கள்.