- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கூத்தாநல்லூரில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் முற்றுகை போராட்டம்.
கூத்தாநல்லூரில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் முற்றுகை போராட்டம்.
தருண் சுரேஷ்
UPDATED: Nov 19, 2024, 12:57:05 PM
திருவாரூர் மாவட்டம்
கூத்தாநல்லூரில் உள்ள வாய்க்கால்களை தூர்வாரி குளங்களில் நீர் நிரப்ப வேண்டும் , தற்போது பெய்து வரும் மழையால் கூத்தாநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீருக்காக தோண்டப்பட்ட சாலைகள் மிகவும் சேறும் சகதியாகவும் உள்ளதை கண்டித்து சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும் , நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் மாடுகள் , பன்றிகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் ,
எஸ்.டி.பி.ஐ. கட்சி
நகராட்சி வார்டுகளில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி பேரணியாக சென்று நகராட்சியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.